நிதி வழங்க பி.சி.சி.ஐ., க்கு உச்ச நீதிமன்றம் தடை

Last Updated : Oct 21, 2016, 02:04 PM IST
நிதி வழங்க பி.சி.சி.ஐ., க்கு உச்ச நீதிமன்றம் தடை title=

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ., நிதி வழங்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

இன்று தலைமை நீதிபதி தாகூர் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் லோதா குழு பரிந்துரைகளை மாநில சங்கங்கள் அமல்படுத்திய பிறகு அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பின்னர் நிதி வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.

ஏற்கனவே லோதா கமிட்டி பரிந்துரை செய்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாகவும், லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கால அவகாசம் எவ்வளவு தேவைப்படும் என்பதையும் குறித்தும் அனுராக் தாகூர், செயலாளர் ஆகியோர் பிரமாண பத்திரங்களை டிசம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆடிட்டர்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் வங்கிக்கணக்குகள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக அனைத்து ஆராய வேண்டும் என பி.சி.சி.ஐ.,க்கு லோதா கமிட்டி உத்தரவிட்டுள்ளது. 

Trending News