Sunil Kanugolu: கர்நாடகாவில் வரலாற்று சிறப்புமிக்க காங்கிரஸ் கட்சியின் வெற்றி வியூகத்திற்கு சூத்தரதாரியாக இருந்த சுனில் கனுங்கோலு, அடுத்து தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசத்திலும் அதேபோன்ற முடிவுகளைக் கொண்டுவரும் பணியில் இணைந்துள்ளார்.
கனுங்கோலு கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் கட்சியின் தேர்தல் வியூகவாதியாகப் பணியாற்றினார். கர்நாடகாவில் கணக்கெடுப்பு, பரப்புரை, வேட்பாளர்களை தேர்வு செய்தது, வெற்றி வியூகம் ஆகியவற்றில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
பாரத் ஜோடோ யாத்ராவிலும் பங்கு
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையின் வெற்றியிலும் கனுங்கோலு பெரும் பங்காற்றினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். இதையடுத்து, அவர் காஷ்மீரில் அந்த நடைபயணத்தை நிறைவு செய்தார். கட்சித் தலைவர்களின் தகவல்படி, கனுங்கோலு பெரும்பாலும் திரைமறைவில், கர்நாடகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு வியூகத்தை அவர் வகுத்தார்.
40% கமிஷன்
கர்நாடகாவில் மும்முனை போட்டி ஏற்பட்ட நிலையில், பாஜக மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இருவரின் வியூகத்தை தகர்ப்பது அவரது உத்தியாக இருந்தது. கட்சித் தலைவர்களின் கூற்றுப்படி, பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் பிரச்சாரங்களான கட்டண அட்டைகள், pay-CM திட்டம், 40 சதவீத கமிஷன் அரசாங்கம் மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா மோடியை குறிவைத்த பிறகு 'Cry PM' பிரச்சாரம் போன்றவற்றுக்கு கானுங்கோலு தான் மூலக் காரணம்.
கனுகோலு, முன்பு பிரதமர் நரேந்திர மோடியுடன் பாஜகவின் ஒரு பகுதியாக பணியாற்றியவர்.
இவர் 2014ல் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றினார். உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய அவர், 2017இல் யோகி ஆதித்யநாத்தின் மகத்தான வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்...
கர்நாடகாவை தொடர்ந்து, கனுங்கோலுவை காங்கிரஸ் இப்போது மத்தியப் பிரதேசத்திற்கு ஒதுக்கியுள்ளது, அங்கு 2018 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கையாளரான ஜோதிதர்தியா சிந்தியாவின் எழுச்சிக்கு பிறகு, பாஜக 2020இல் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
குறிப்பிடத்தக்க வகையில், மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் இருவரும் அயராது உழைத்து வருகின்றனர்.
மத்திய மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌஹான் அரசாங்கத்தை முட்டுக்கட்டை போட, கர்நாடகா போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சாரத்தை தயார் செய்யும்படி கனுங்கோலுவிடம் கேட்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக பணியாற்றி வரும் கட்சியின் மூத்த தலைவர் ஜேபி அகர்வாலின் அனுபவத்தால், கமல்நாத் மற்றும் திக்விஜய சிங் இருவரும் தற்போது அடிமட்ட அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அடுத்த அசைன்மென்ட்
திக்விஜய் சிங், சட்டசபை தொகுதிகளில் கட்சியின் கோட்டையை பிடிப்பதாகவும், கமல்நாத் மாவட்ட வாரியாக கட்சியை பலப்படுத்தி வருவதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். கட்சித் தலைவர் கூறுகையில், சிவராஜ் சிங் சவுகானின் அரசாங்கம் பல்வேறு பிரிவுகளால் உட்கட்சி மோதலில் போராடுகிறது, கனுங்கோலுக்கு அதையே எதிர்கொள்ள வேண்டியுள்ளது, இந்த பணி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கனுங்கொலுவின் கடந்தகால வெற்றிகளின் மூலம், அவரது வழிகாட்டுதலின் கீழ் பிரச்சாரம் மற்றும் ஆய்வுகள் மூலம், கடந்த இருபது ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த மாநிலத்தில் தங்களது கட்சி மீண்டும் வெற்றியை ருசிக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
மேலும் படிக்க | தாமதமாகும் காங்கிரஸ் சட்ட மன்ற கட்சிக் கூட்டம்... கர்நாடகாவில் பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ