சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதி தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை ஏன் கேரள பெண்கள் எதிர்கிறார்கள் என சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்!
கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது.
உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போராட்டத்தில் சில பெண்கள் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக திருவனந்தபுரத்தில் கள்ளிப்பாலம் பகுதியிலும், இடுக்கியிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். இந்நிலையில் ஏன் கேரள பெண்கள் மத்தியில் இந்த எதிர்ப்பு கோஷம் எழுந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
Why are Kerala women protesting SC judgment on Sabarimalai?The judgment does not compel them on “those 5 days” to go to the temple. It is voluntary. Since they are not compelled to go to the temple, those who want to go cannot be forced not to go. As for what Gods want who knows?
— Subramanian Swamy (@Swamy39) October 6, 2018
"ஏன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள பெண்கள் எதிர்த்து நிற்கிறார்கள்?. இந்த தீர்ப்பில் "அந்த 5 நாட்களில்" அவர்களை கோவிலுக்கு செல்ல யாரும் தூண்டவில்லை. கோவிலுக்குள் செல்வது அவரவர் விருப்பம், கடவுள் என்ன நினைகிறார் என்பது யாருக்கு தெரியும்" என பதிவிட்டுள்ளார்.
I am happy that SC has decided that gender equality in worship is to be followed in Sabarimalai. This what I had been advocating
— Subramanian Swamy (@Swamy39) September 28, 2018
முன்னதாக இந்த வரலாற்று தீர்ப்பு வந்த நாள் அன்று இந்த தீர்ப்பை தான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்ததாக சுப்பிரமணின் சுவாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.