Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர் குழு பரிந்துரை

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 12, 2021, 07:21 PM IST
  • இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.
  • ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர் குழு பரிந்துரை title=

கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி   பயன்பாட்டில் உள்ள நிலையில்,  ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த  நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், விரைவில் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

எனவே, மேலும் 5 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வரும் நிலையில், ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்த நிறுவனம் ஸ்புட்னிக்-வி (Sputnik V)  தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.

ALSO READ | ரஷ்யாவின் ஸ்பூட்னிக் -5 தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைக்கலாம்: Dr Reddy's

இது தொடர்பாக ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என பரிந்துரை செய்து, டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கியது. 

இந்த பரிந்துரையை பரிசீலனை செய்து, மருந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) விரைவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற தடுப்பூசிகளை போல, 2 முறை செலுத்த வேண்டிய ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பநிலையில் வைத்திருக்க வேண்டும். 

ஆகஸ்ட் 11 அன்று ரஷ்யா (Russia), கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. 

ALSO READ | Sputnik V தயாரிக்கும் பெங்களூரு நிறுவனம்; COVID தடுப்பூசி உற்பத்தி மையமாக மாறும் இந்தியா

Trending News