சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தெரிவத்துள்ளனர்!
இக்கூட்டத்தில், மாநில அளவிலான விவகாரங்களில் உள்ள வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு தேசிய அளவில் ஆளும் பாஜக-விற்கு எதிராக அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
Meeting for the Opposition parties begins #Delhi pic.twitter.com/VX8p0C4MKR
— ANI (@ANI) February 1, 2018
மேலும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும், மத மற்றும் இன அடிப்படையிலான வன்முறைகள் பரப்புகையில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சி தலைவர்களும், ராஜஸ்தானில் நடைபெற்ற 2 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கும் சோனியா காந்திக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!