புதுடெல்லி: கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானின் நெருக்கடிக்கு மத்தியில், டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் கடந்த 6 மாத சாதனையை கொரோனா முறியடித்தது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் 107 கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் ஒரு நோயாளி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது
டெல்லியிலும் கொரோனா தொற்று (Coronavirus) விகிதம் மீண்டும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நேர்மறை விகிதம் 0.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஜூன் 25, 2021 அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் 22, 2022 அன்று, தொற்று விகிதம் 0.19 சதவீதமாக இருந்தது. டெல்லியில் 10 நாட்களுக்குப் பிறகு, கொரோனாவால் ஒருவர் இறந்தார், அதன்படி இறப்பு எண்ணிக்கை 25,101 ஆக அதிகரித்துள்ளது.
ALSO READ | டெல்டாவை விட வேகமாக பரவும் ஒமிக்ரான்: WHO எச்சரிக்கை
எந்த மாநிலத்தில் எத்தனை Omicron தொற்றுகள் உள்ளன?
மகாராஷ்டிராவில் மேலும் 6 புதிய Omicron தொற்றுகள் பதிவாகியதை அடுத்து, இந்தியாவில் அதன் மொத்த எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அதிகாரிகளின் கூற்றுப்படி, இதுவரை மகாராஷ்டிராவில் 54, டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 14, தெலங்கானாவில் 20, கேரளாவில் 11, குஜராத்தில் 9, ஆந்திராவில் 1, சண்டிகரில் 1, தமிழ்நாட்டில் 1 மேலும் மேற்கு வங்கத்தில் 1 Omicron தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்ட பிறகும் Omicron தொற்று ஏற்பட்டது
மகாராஷ்டிராவில், ஞாயிற்றுக்கிழமை, 6 பேர் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாநிலத்தில் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் இருவர் தான்சானியாவுக்குச் சென்றுள்ளனர். பிரித்தானியாவில் இருந்து இருவர் நாடு திரும்பியுள்ள நிலையில், ஒருவர் மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் தடுப்பூசி முறையாக எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | omicron: 3 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு ’ஒமிக்ரான்’
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR