கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் எதிர்ப்பு ஊசி; டாக்டர், செவிலியர் இடைநீக்கம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ள நிலையில், நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2021, 12:42 PM IST
கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் எதிர்ப்பு ஊசி; டாக்டர், செவிலியர் இடைநீக்கம் title=

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ள நிலையில், நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப கால கட்டத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட முன்வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் (Maharashtra) நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கே ஒருவருக்கு கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் எதிர்ப்பு ஊசி செலுத்தப்பட்டது.

மகாராஷ்டிராவின் தானே (Thane) மாவட்டத்தில் உள்ள மருத்துவ மையத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தடுப்பூசிக்கு  (Vaccine) பதிலாக ரேபிஸ் எதிர்ப்பு ஊசியை செலுத்தியது தொடர்பாக, ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தானே மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் யாதவ் திங்கள்கிழமை அங்குள்ள கல்வா பகுதியில் உள்ள உள்ளூர் மருத்துவ மையத்திற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சென்றார்.அவர் தடுப்பூசிக்கான வரிசையில் நிற்காமல், தவறான ஒரு வரிசையில் நின்றிருந்தார்.

தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அவருக்கு ரேபிஸுக்கு எதிரான ஊசி போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது போது அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த நபர் என்பது தெரிய வந்ததாக தானே மாநகராட்சி (TMC) செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

ALSO READ: WHO vs Covaxin: கோவேக்சின் தடுப்பூசியை WHO விரைவில் அங்கீகரிக்கலாம்…

தவறான தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் இதனால், பீதியடைந்தார். இருபினும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் உடல் நல சிக்கல்கள் ஏதும் இல்லை என்று அந்த அதிகாரி கூறினார். பின்னர் பாதிக்கப்பட்ட நபர் அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், மருத்துவ மையத்தின் பொறுப்பாளராக இருந்த ஒரு பெண் மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் ஆகியோர் இந்த தவறுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கல்வாவின் குடிசை பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவ மையம், இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: இந்தியாவின் ‘இந்த’ மாநிலங்களில் 100% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News