மனநலம் பாதிக்கப்பட்ட சசி தரூர், பாக்கிஸ்தான் செல்லலாம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் ‘இந்து பாக்கிஸ்தான்’ என்னும் கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்!

Last Updated : Jul 12, 2018, 05:55 PM IST
மனநலம் பாதிக்கப்பட்ட சசி தரூர், பாக்கிஸ்தான் செல்லலாம்! title=

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் ‘இந்து பாக்கிஸ்தான்’ என்னும் கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்!

முன்னதாக கேரளாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், "2019-ஆம் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியாவின் அரசியலமைப்பை கிழித்து எரியும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும். சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்காத ஒரு இந்து பாகிஸ்தான் உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்" என தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தெரிவித்துள்ளதாவது... "சசி தரூரின் மனநிலை சரியில்லை, இந்துக்கள் சர்வதிகாரிகள் இல்லை. அவர் பாக்கிஸ்தான் சென்று விடுவது நல்லது" என தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் தற்போது இஸ்லாமியர்களுக்கு இடமில்லை. எனவே சசி தரூரின் இந்த கருத்திற்கு ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும். 

சசி தரூரின் இந்த கருத்து எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. அவர் சமீபத்தில் தனது 'Why I Am A Hindu' என்னும் புத்தகத்தினை வெளியிட்டார். இந்த தலைப்பிற்கான விளக்கத்தை கொடுத்த அவருக்கு இந்துக்கள் குறித்து தெரியாதது வியப்பாக இருக்கின்றது.

பாக்கிஸ்தான் பத்திரிக்கையாளருடன் சசி தரூக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து கருத்து தெரிவித்த சுவாமி அவர்கள், தரூர் ஏன் பாக்கிஸ்தான் செல்லக் கூடாது எனவும் வினா எழுப்பியுள்ளார்.

நாட்டின் பெருமையினை காக்க பிரதமர் மோடி அவர்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வேலையில், தரூர் இவ்வாறு கருத்துகள் தெரிவித்து வருவது அவர் சரியான மனநிலையில் இல்லை என்பதை தான் காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சசி தரூரின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கோரியாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்!

Trending News