கான்பூர் ரயில் விபத்து: சுரேஷ் பிரபு தனிப்பட்ட முறையில் கண்காணிப்பு

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாக 

Last Updated : Dec 28, 2016, 09:34 AM IST
கான்பூர் ரயில் விபத்து: சுரேஷ் பிரபு தனிப்பட்ட முறையில் கண்காணிப்பு title=

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாக 
ஒன்றிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விபத்து ஏப்பட்டது.

தனிப்பட்ட முறையில் மீட்பு பணி கண்காணிகறேன் என்று சுரேஷ் பிரபு டிவிட்டர் மூலம் கூறியுள்ளார்.

 

 

 

 

உயர் அதிகாரிகள் விபத்து நேரிட்ட பகுதிக்கு உடனடியாக விரைந்த்தனர்.  மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

காலை 5:20 மணியளவில் ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக வடக்கு மத்திய ரயில்வே புரோ அமித் மால்வியா கூறியுள்ளார். 

அஜ்மீரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் சீல்டா நோக்கி சென்ற விரைவு ரெயில் (எண் 12988 ) இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறினார்.

இதற்கிடையே விபத்து தொடர்பாக தகவல்களை அறிந்துக் கொள்ள இந்திய ரயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது.

Trending News