புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நேரிட்டது. விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 65-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடுத்த தகவலின் படி ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் முதல் 5 மற்றும் கடைசி 3 ரயில் பெட்டிக்கு ஏதும் ஏற்படவில்லை.
அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விபத்து ஏப்பட்டது.
காலை 5:20 மணியளவில் ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக வடக்கு மத்திய ரயில்வே புரோ அமித் மால்வியா கூறியுள்ளார்.
அஜ்மீரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் சால்டா நோக்கி சென்ற விரைவு ரெயில் (எண் 12988 ) இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பாக தகவல்களை அறிந்துக் கொள்ள இந்திய ரயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது. கான்பூர் - 0512-2323015, 2323016, 2323018, அலகாபாத்துக்கு - 0532-2408149, 2408128.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறினார்.
இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு செய்த டிவிட்
Injured already started getting medical care,Doctors r attending to all. We r working with hospitals& dist admin to offer all possible help
— Suresh Prabhu (@sureshpprabhu) December 28, 2016
Directed CRB, all Sr officials to personally ensure best possible help. Medical vans,relief vans were rushed immediately.Officers r on spot
— Suresh Prabhu (@sureshpprabhu) December 28, 2016
Ex gratia will be paid to injured . All passengers are being provided with necessary assistance to ensure least inconvenience.Doing our best
— Suresh Prabhu (@sureshpprabhu) December 28, 2016
இந்த விபத்து ரூரா கான்பூர் மற்றும் ஈட்டவா இடையே நடந்தது.
தடம் புரண்ட 15 ரயில் பெட்டிகளில் இரண்டு பொது போகேய்ஸ் மற்றும் 13 சிலீபர்ஸ்
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு