இந்த நாட்டில் இந்தியா உட்பட 20 நாடுகளின் பயணிகளுக்குத் தடை: காரணம் இதுதான்

விமானங்களின் தடை தற்காலிகமானது என்று சௌதி அரேபியா குறிப்பிட்டிருந்தாலும், இத்தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் அந்நாடு கொடுக்கவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2021, 04:32 PM IST
  • 20 நாடுகளில் இருந்து பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை சவுதி அரேபியா தடை செய்துள்ளது.
  • இந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
  • சவுதி அரேபியாவில், COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368,639 ஆக உள்ளது.
இந்த நாட்டில் இந்தியா உட்பட 20 நாடுகளின் பயணிகளுக்குத் தடை: காரணம் இதுதான் title=

புதுடெல்லி: COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை சவுதி அரேபியா தடை செய்துள்ளது.

இந்தியா உட்பட 20 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசாங்க தூதர்கள், சவுதி குடிமக்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (பிப்ரவரி 3) முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அர்ஜென்டினா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரேசில், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், எகிப்து, லெபனான், அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், போர்ச்சுகல், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்காக விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு (Saudi Arabia) பயணம் செய்வதற்கு முன்னர், 14 நாட்களுக்குள் மேற்கூறிய 20 நாடுகளின் வழியாக பயணம் செய்தவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் சுகாதார அமைச்சகத்தினால் விதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் என மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஓமன் (Oman) அதன் எல்லைகளை மீண்டும் திறக்க தாமதப்படுத்திய சில நாட்களுக்கு பின்னர் சவுதி அரசாங்கத்தால் இந்த தடை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களின் தடை தற்காலிகமானது என்று சௌதி அரேபியா குறிப்பிட்டிருந்தாலும், இத்தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் அந்நாடு கொடுக்கவில்லை.

தடைக்கு முந்தைய நாளில், 310 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அரசு நடத்தும் செய்தி நிறுவனத்தின்படி, சவுதி அரேபியாவில், புதன்கிழமை நிலவரப்படி, COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368,639 ஆக உள்ளது. சுமார் 6,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் இறந்தனர்.

ALSO READ: தமிழக அரசு உலக சாதனை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News