ஆண்டுக்கு ரூ.13510 கோடி லாபம் - ரயில்வே துறையின் Master Plan!

முழுவதும் மின்னூட்ம் செய்யப்பட்ட வழிதடம் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றினை இந்திய ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ளது!

Last Updated : Feb 10, 2018, 12:49 AM IST
ஆண்டுக்கு ரூ.13510 கோடி லாபம் - ரயில்வே துறையின் Master Plan! title=

முழுவதும் மின்னூட்ம் செய்யப்பட்ட வழிதடம் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றினை இந்திய ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ளது!

அதன்படி சுமார் 38000 km தொலைவிற்கு 100% மின்னூட்டம் செய்யப்பட்ட வழித்தடம் அமைக்கும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. இந்த செயல்பாடானது கீழ்காணும் அட்டவனைப்படி அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே மின்மயமாக்கல் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக, பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) தணிக்கை அமைப்பு மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றுடன் ஒப்ந்தம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டீசல் டிராக்டிலிருந்து மின்சார டிராகாக வழித்தடங்களை மாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு 13510 கோடி ரூபாய்க்கு தொடர்ச்சியான சேமிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை ரயில்வே துறை அமைச்சர் ராஜேஷ் கோஹெய்ன் இன்று ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்!

Trending News