ஆந்திராவின் எலூருவில் பல நாட்களாக மக்கள் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கான காரணம் புலப்படாமல் இருந்தது. இப்போது, பால், காய்கறிகள் மற்றும் ரத்த மாதிரிகளில் பூச்சிக்கொல்லி எச்சங்கள், ஆர்கனோக்ளோரின், ஈயம் மற்றும் நிக்கல் ஆகியவை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவைதான் மர்ம நோயை ஏற்படுத்தியதாகவும் எய்ம்ஸ் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (ICT) நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் எலூருவில் ஏற்பட்ட மர்ம நோயால் சுமார் 600 பேர் நோய்வாய்ப்பட்டனர், ஒருவர் உயிரையும் இழந்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காய்கறிகளில் காணப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் அளவு, அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) விஞ்ஞானிகள் குழு, அரிசியில் பாதரசத்தின் தடயங்களும் இரத்தத்தில் ஆர்கனோபாஸ்பரஸின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர். எனினும், இந்த பொருட்கள் மனித உடலில் எவ்வாறு நுழைந்தன என்பதைக் கண்டறிய கூடுதல் ஆய்வு தேவை என்று என்ஐஎன் மேலும் கூறியது.
ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், அப்பகுதியின் தண்ணீரைப் பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. எனினும், நீரில் கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்படவில்லை. பாலிலும் கன உலோகங்கள் இல்லை என்று தடுப்பு மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறைச்சி மற்றும் மீன் பகுப்பாய்வு தொடர்பான அறிக்கைகள் அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று மாநில சுகாதார ஆணையர் கட்டமனேனி பாஸ்கர் தெரிவித்தார்.
ALSO READ: எலூரு மர்ம நோயின் மர்மம் நீடிக்கிறது: ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்
ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி (YS Jagan Mohan reddy), மனிதர்களின் உடலில் ஈயம், நிக்கல், ஆர்கனோக்ளோரின் மற்றும் ஆர்கனோபாஸ்பரஸ் ஆகியவை எவ்வாறு நுழைந்தன என்பது குறித்து கண்டறியுமாறு நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எலுருவின் (Eluru) நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களைத் தவிர்க்க அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு புது தில்லியின் AIIMS, ஐதராபாத்தின் IICT ஆகியவற்றின் நிபுணர்களை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
ALSO READ: இந்த மாநிலத்தில் பரவும் மர்ம நோய், 1 பலி; ஆபத்தான நிலையில் 292 பேர்
பூச்சிக்கொல்லிகளின் கண்மூடித்தனமான பயன்பாட்டை நிறுத்த நேரம் வந்துவிட்டது என்றும் முதல்வர் ரெட்டி கூறியுள்ளார். நோய்த்தொற்றின் மூலத்தை முழுமையாக ஆராய அரசாங்கத்தால் ஒரு பல்துறைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 21 பேர் கொண்ட கமிட்டிக்கு தலைமைச் செயலாளர் நீலம் சாஹ்னி தலைமை தாங்குவார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR