இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் வீரத்தை கெளரவிக்கும் வகையில், அவரைப் பற்றிய பாடம் பள்ளி பாடபுத்தகத்தில் இடம் பெறும் என்று ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் எப்16 விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது இந்தியா. அப்பொழுது ஏற்ப்பட்ட விபத்தில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.
இந்தியா கொடுத்த தொடர்ந்து அழுத்தத்தால் இரண்டு நாள் கழித்து நேற்று விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று இரவு 9.17 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் இருந்து இந்திய அதிகாரிகளுடன் வெளியேறிய அபிநந்தன். அங்கிருந்து அம்ரித்சரஸ் சென்று விமானம் மூலம் மூலம் டெல்லி வந்தடைவார். நாடு முழுவதும் உள்ள மக்கள் அவரது வருகையை கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தால் அபிநந்தன், மிகவும் பிரபலமடைந்தார். அபிநந்தனின் வாழ்க்கையானது, ராஜஸ்தான் பள்ளிகளில் பாடமாக வெளிவரவுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்த்ரா நேற்று அறிவித்தார்.