புது டெல்லி: துபாய், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுடன் தொடர்புகளைக் கொண்ட மின்-டிக்கெட் மோசடியை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக ஆர்.பி.எஃப் டி.ஜி.அருண்குமார் தெரிவித்தார். இதன் முக்கிய வேர் துபாயில் உள்ளது. விசாரணையின் போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் வங்கி கணக்குகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 2,400 கிளைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Railway Protection Force (RPF) DG: We're a step ahead in operation against e-ticketing racket. We've unearthed an oragnised gang. Its kingpin is probably sitting in Dubai. We're investigating the members of the gang, the manner in which the money is going to banks&some companies. pic.twitter.com/E5SHHBrBtz
— ANI (@ANI) January 21, 2020
பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி பற்றிய சந்தேகம்:
சமீபத்திய ஆண்டுகளில் சட்டவிரோதமாக டிக்கெட் வர்த்தகம் மீதான மிகப்பெரிய ஒடுக்குமுறையில் ஜார்க்கண்டிலிருந்து ஒருவரை ஆர்.பி.எஃப் கைது செய்துள்ளது. அவர் பயங்கரவாத நிதியுதவியில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் குலாம் முஸ்தபா மற்றும் புவனேஸ்வரில் இருந்து கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஐ.ஆர்.சி.டி.சியின் 563 ஐடிகள், 3000 வங்கி கணக்குகள்:
ஐ.ஆர்.சி.டி.சியின் 563 தனிப்பட்ட அடையாளங்கள் குலாம் முஸ்தபாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், எஸ்பிஐ வங்கயில் 2,400 கிளைகளிலும், பிராந்திய கிராமப்புற வங்கிகளின் 600 கிளைகளிலும் வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளார். ஒரு நபர் எதற்கு இத்தனை வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளார் ஏ என்ற கோணத்தில் மேலும் சந்தேகங்கள் அதிகமாகி உள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவரிடம் என்ஐஏ(NIA), இடி(ED), ஐபி(IP) அமைப்பு விசாரணை மேற்கொண்டது:
இ-டிக்கெட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட குலாம் முஸ்தபாவை கடந்த 10 நாட்களில் ஐபி, சிறப்பு பணியகம், இடி, என்ஐஏ மற்றும் கர்நாடக போலீசார் விசாரித்ததாக ஆர்.பி.எஃப் டி.ஜி.அருண்குமார் தெரிவித்தார். இந்த மோசடி பயங்கரவாத நிதியுதவியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.