பாஜக-விற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர் - ப.சிதம்பரம்!

ரபோல் விவகாரம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 21, 2018, 05:39 PM IST
பாஜக-விற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர் - ப.சிதம்பரம்! title=

ரபோல் விவகாரம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!

பெங்களூர்: ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகின்றது.

இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரபேல் கொள்முதல் விவகாரத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் திருப்தியளிப்பதால் இது தொடர்பான விசாரணைக்கு அவசியம் இல்லை என கருத்தும் தெரிவித்தது.

இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், 'எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ரபேல் போர் விமானம் பேர ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு இந்த அரசு உத்தரவிடாவிட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் நாங்கள் அந்த காரியத்தை தொடருவோம்' என தெரிவித்துள்ளார்.

ரபேல் ஊழலை முன்வைத்து காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தால்.,  நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக-விற்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்துள்ளனர். இதேப்போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இது முக்கிய  பிரச்சனையாக எதிரொலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News