அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் LPG சிலிண்டர் விலை உயர்வினை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்!
வீட்டு உபயோகத்திற்காக இல்லம் தோறும் விநியோகிக்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல்எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த நவம்பர் 7-ஆம் நாள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வினை கண்டித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் மகளிரணி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படுகிறது. அதேப்போல் சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் முதல் நாள் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் இம்மாதத்தின் முதல் நாள் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.
Punjab Congress Women Wing today staged a protest in Amritsar over the increase in the price of LPG cylinders. pic.twitter.com/IZ8prbbyxB
— ANI (@ANI) November 11, 2018
பின்னர் வினியோகஸ்தர்களின் தேவைக்கேற்ப மீண்டும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இது குறித்து இந்தியன் எண்ணெய் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ₹ 507.42-வும், மானியம் இல்லா சிலிண்டர் ₹ 942.50-வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இம்மாத்ததின் முதல் நாள் அறிவிக்கப்பட்ட விலையின்படி... மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ₹ 505.34-வும், மானியம் இல்லா சிலிண்டர் ₹ 939.00-வும் அறிவிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையுர்வினை ஜீரனிக்க இயலாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருவது, பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!