புது டெல்லி: ஜூலை மாதம் முடியப்போகிறது. ஆகஸ்ட் வருகிறது. புதிய மாதத்துடன், பல விதிகளில் மாற்றங்கள் இருக்கப் போகின்றன. எல்பிஜி சிலிண்டர்களின் (எல்பிஜி) விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம். எனினும், சிலிண்டர்களின் விலை எவ்வளவு உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும் என்பது ஆகஸ்ட் 1ஆம் தேதிதான் தெரியவரும். பேங்க் ஆஃப் பரோடாவும் ஆகஸ்ட் 1 முதல் காசோலைகள் தொடர்பான விதிகளை மாற்றப் போகிறது. பாங்க் ஆப் பரோடாவிலும் ஆகஸ்ட் 1 முதல் பாசிடிவ் பே சிஸ்டம் தொடங்கப் போகிறது. இதனுடன், சுதந்திர தினம், ரக்ஷாபந்தன் போன்ற பல பண்டிகைகளும் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்பட உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறையும் மற்ற மாதங்களை விட அதிகமாக இருக்கும்.
பாங்க் ஆப் பரோடாவில் காசோலை கட்டண விதிகள் ஆகஸ்ட் 1 முதல் மாறவுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, பாங்க் ஆஃப் பரோடா காசோலை செலுத்தும் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும். பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல், 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை கொண்ட காசோலைகள் பாசிடிவ் பே சிஸ்டம் முறையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைகளை வழங்குபவர்கள், எஸ்எம்எஸ், நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப் மூலம் தங்கள் காசோலை தொடர்பான தகவல்களை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் சம்பந்தப்பட்ட காசோலை ரிவர்த்தனைக்கு செலுத்தப்படும். 2020 ஆம் ஆண்டில், காசோலைகளை செலுத்துவதற்கான பாசிடிவ் பே சிஸ்டம் முறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: போன் தொலைந்துவிட்டால் GPay, PhonePe மற்றும் Paytm -ஐ பிளாக் செய்வது எப்படி?
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. இம்முறையும் ஆகஸ்ட் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படும். இம்முறையும் எல்பிஜி விலை உயர வாய்ப்புள்ளது. எனினும், இது குறித்து இன்னும் தெளிவாக எதுவும் கூற முடியாது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிகரிக்குமா அல்லது அவற்றின் விலை குறையுமா என்பது ஆகஸ்ட் 1ம் தேதி தான் முடிவு செய்யப்படும். புதிய விலையை அறிய ஆகஸ்ட் 1ம் தேதி காலை வரை காத்திருக்க வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2022 ஆகும். ஜூலை 31, 2022க்குள் உங்கள் ரிட்டனைத் தாக்கல் செய்யவில்லை என்றால், ஆகஸ்ட் 1 முதல் உங்கள் ரிட்டனைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும். இருப்பினும், ஆகஸ்ட் 1 அல்லது அதற்குப் பிறகு, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியும். ஆனால் ஜூலை 31 க்குப் பிறகு, தங்கள் ரிட்டன் தாக்கல் செய்வதற்கு வருமான வரித்துறை நிர்ணயித்த அபராதத்தை செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய விரும்பினால், அபராதத் தொகையைச் செலுத்திய பின்னரே நீங்கள் அதைச் செய்ய முடியும்.
மேலும் படிக்க: ITR Filing AY22-23: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் இதோ
நாட்டில் உள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி தயாரிக்கிறது. இந்தப் பட்டியலின்படி ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 18 வங்கி விடுமுறைகள் உள்ளன. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. எனவே மீதம் இருக்கும் சில நாட்களிலேயே நமது வங்கி தொடர்பான பணிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆகஸ்டில், மொஹரம், ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கணேஷ் சதுர்த்தி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் போலவே, ஆகஸ்ட் மாதத்திலும், வார விடுமுறை காரணமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும். இந்த வார விடுமுறை நாட்களையும் சேர்த்து, ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட உள்ளன. உள்ளூரைப் பொறுத்து வெவ்வேறு மாநிலங்களில் வங்கி விடுமுறை நாட்களில் சில மாறுபாடுகள் இருந்தால், அதன் அடிப்படியில் சில மாநிலங்களில் விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
மேலும் படிக்க: Flight Ticket Offer: வெறும் ரூ1499-ல் விமான பயணம், முந்துங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ