இஸ்ரோ : ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள் சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி- 34 ராக்கெட் கவுன்டவுன் துவங்கியது

Last Updated : Jun 20, 2016, 10:28 AM IST
இஸ்ரோ : ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள் சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி- 34 ராக்கெட் கவுன்டவுன் துவங்கியது title=

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த மாதம் 22-ம் தேதி 20 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணி நேர கவுன்டவுன் இன்று காலை 9.26 மணிக்கு துவங்கியது.

இந்த ராக்கெட்டை ஜூன் 22-ம் தேதி காலை 9.26 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த சத்ய பாமாசாட், புனே என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த ஸ்லயம் ஆகிய செயற்கை கோள்களுடன் மற்றும் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 17 செயற்கை கோள்கள் என மொத்தம் 20 செயற்கைக்கோள் அடங்கும். இவற்றின் மொத்த‌ எடை 1288 கிலோ ஆகும்.

Trending News