குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களுக்கு துணையாக எதிர்கட்சி தலைவர்கள் களமிறங்க துவங்கியுள்ளனர்...
திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்குப் பின்னால் எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுதியாக நின்றனர், குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, நாட்டின் சூழ்நிலை "மோசமாகிவிட்டது" என்று தெரிவித்து வருகிறார்.
போராட்டத்தின் போது அவர் தெரிவிக்கையில்., "நாங்கள் அரசியலமைப்பிற்காக போராடுவோம், மத்திய அரசு தனது சொந்த மக்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
देश में बढ़ती हिंसा और छात्रों पर हो रहे अत्याचार पर कांग्रेस महासचिव श्रीमती @priyankagandhi का वक्तव्य। #BJPBurningBharat pic.twitter.com/dzkyN72n9p
— Congress (@INCIndia) December 16, 2019
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து பேரணி நடத்தினார், மேலும் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தினை அகற்றும் வரை வெகுஜன போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் உச்சகட்டத்தை எட்டியது. இம்மாநிலத்தில் போராட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைப்பெற்ற கலவரத்தில் இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனிடையே தலைநகர் டெல்லியின், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., மாணவர்கள் நேற்று முன்தினம் தங்களது போராட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றனர். இந்த போராட்டத்தில் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு டெண்டர்களும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. ஜாமியா பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தேர்வுகளை பல்கலை., நிர்வாகம் ஞாயிறு அன்று ஒத்திவைத்த பின்னர் குளிர்கால விடுமுறையை அறிவித்தது. கால அட்டவணையின்படி, பல்கலைக்கழகம் டிசம்பர் 16 முதல் - ஜனவரி 6, 2020 வரை விடுப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் அடுத்த நகர்வாக அலிகாரிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் (AMU) ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டங்களை தொடந்து அலிகாரில் தற்போது இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் அலிகார் முஸ்லீம் பல்கலை கழகத்திற்கும் முன்னதாகவே குளிர்கால விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.