புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஞாயிற்றுக்கிழமையன்று உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு ‘விவசாயிகளின் மகாபஞ்சாயத்து’ கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக நரேந்திர மோடி அரசாங்கத்தை தொடர்ந்து தாக்கிப் பேசிய பிரியங்கா காந்தி தனது ஆவேசமான பேச்சின் போது, விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டதா அல்லது பிரதமர் மோடியின் பணக்கார நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
Congress leader Priyanka Gandhi Vadra welcomed by party workers on the way to Meerut. She was presented the Bhagavad Gita by a party worker. pic.twitter.com/3YJRox7Luy
— ANI UP (@ANINewsUP) March 7, 2021
"100 நாட்கள் முடிந்துவிட்டன, லட்சம் விவசாயிகள் டெல்லியில் பல எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் ... இந்த பண்ணை சட்டங்கள் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏன் இன்னும் தடுத்த நிறுத்தப்படுகிறார்கள்?" என்று பல கேள்விகளை அடுக்கினார்.
கடந்த ஆண்டு அரசாங்கம் நிறைவேற்றிய மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடந்த 100 நாட்களையும் கடந்து தொடர்கிறது.
Also Read | Commanders' Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்
விவசாயிகளை மதிக்காததால் தான், பிரதமர் மோடி தலைநகரில் எந்த எல்லை பகுதிக்கும் சென்று விவசாயிகளை சந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு பிரதமரும் மத்திய அரசும் மரியாதை கொடுக்க வேண்டாமா? விவசாயிகளை சந்திக்கக்கூட முடியாத அளவுக்கு அப்படி என்ன ஆணவப் போக்கு?” என்று பிரியங்கா சாடினார்.
கடுமையான வானிலைகளில் தப்பிப்பிழைத்து, எதிர்ப்பு போராட்டம் நடத்தும் இடங்களில் மின்சார வெட்டுக்களை எதிர்கொண்ட போதிலும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக உள்ளனர் என்பதை பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசு அவர்களை சந்திக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் பிரியங்கா காந்தி.
விவசாயிகளின் மகாபஞ்சாயத்து மேடையில் இருந்து பிரதமர் மோடியை, பிரியங்கா சாடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, மதுராவில் ‘விவசாயிகளின் மகாபஞ்சாயத்து’ உரையாற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடியை “திமிர்பிடித்தவர்” என்றும், தனது கொள்கைகளுக்கான பொறுப்பை ஏற்காத “கோழை” என்றும் காட்டமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | Women's Day 2021: வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR