மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே நம் கடமை -மோடி!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் இன்று வீடியோ கன்பிரஸிங் மூலம் டெல்லியில் இருந்து துவக்கி வைத்தார். 

Last Updated : Sep 15, 2018, 10:33 AM IST
மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே நம் கடமை -மோடி! title=

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் இன்று வீடியோ கன்பிரஸிங் மூலம் டெல்லியில் இருந்து துவக்கி வைத்தார். 

இத்திட்டத்தினை துவங்கி வைத்த அவர் நிகழ்ச்சியின் போது பேசியதாவது... மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா என்னும் கனவை நிறைவேற்றுவதே நம் புதிய இலக்கு. இன்று துவங்கி காந்தி பிறந்த நாள் வரை, மகாத்மாவின் கனவை நிறைவேற்ற நம்மை அர்ப்பணித்து கொள்வோம். நான்கு வருடத்திற்கு முன்னர் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இத்திட்டத்தில் ஏராளமானோர் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர் என்பதை பெருமையாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சமூக மாற்றத்திற்கான தூதர்களாக இளைஞர்கள் திகழ்ந்து வருகின்றனர். 

தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு 4 ஆண்டுகள் நகர்ந்துள்ள நிலையில்  நாடெங்கிலும் கிட்டத்தட்ட 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் 90 சதவிகித மக்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர் "கழிப்பறைகளை கட்டியமைக்க உதவினால் மட்டும் போதாது, இந்த பழக்கத்தை பொதுமக்கள் உள்வாங்க வேண்டும்," எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் 18 இடங்களில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வழியாக சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தூதர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்

மும்பை, கோயம்புத்தூர், நொய்டா, சிக்கிம், தண்டேவாடா, சேலம், ஃபதேபூர், பாட்னா சாஹிப், ராஜ்கர், எம்.டி. அபு, அஜ்மீர், சிம்டெகா, கொச்சியில், பெங்களூரு, பிஜ்னோர் மற்றும் ரேவாரி ஆகிய 18 இடங்களில் இருக்கும் பிரச்சாரம் குழு உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். 

Trending News