சிவராஜ் சிங் சவுகானுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, அவரை ஒரு திறமையான நிர்வாகி என்று பாராட்டினார்.

மத்திய பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் சரிந்ததை அடுத்து, 61 வயதான சிவ்ராஜ் சிங் சவுகான் திங்களன்று மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2020, 06:54 AM IST
சிவராஜ் சிங் சவுகானுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, அவரை ஒரு திறமையான நிர்வாகி என்று பாராட்டினார். title=

மத்தியப் பிரதேசம்: மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்ந்து சில நாட்களிலேயே மத்தியப்பிரதேச முதல்வராக பதவியேற்ற பாஜக தலைவர் சிவ்ராஜ் சிங் சவுகானை வாழ்த்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று திங்களன்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச முதல்வராக பதவியேற்றதற்கு ஸ்ரீ சவுகான் சிவ்ராஜ் ஜிக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகி. அவர் எம்.பி.யின் (Madhya Pradesh) வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாநிலத்தை முன்னேற்றப் பாதையின் உயரத்திற்கு கொண்டு செல்ல அவருக்கு வாழ்த்துக்கள்” என்று பிரதமர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

 

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் வெறும் 15 மாதங்களில் முடிவடைந்தது. அவரது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து 61 வயதான சிவ்ராஜ் சிங் சவுகான் திங்களன்று மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாகும். அவர் மாநிலத்தின் 19 வது முதல்வராகவும் பதவி ஏற்றார்.

பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் ராஜ் பவனில் நடந்த ஒரு எளிய விழாவில் சவுகானுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய பாஜக தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், அமைச்சர்கள் பின்னர் பதவியேற்பார்கள் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஜோதிராதித்ய சிந்தியாவுடன் 22 எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்ததை அடுத்து மத்திய பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News