பாஜக ஒரு குடும்ப கட்சி அல்ல: காங்கிரசை மறைமுகமாக தாக்கிய பிரதமர் மோடி

சிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு கட்சிதான் குடும்பம் என காங்கிரசை மறைமுகமாக தாக்கிய பிரதமர் மோடி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2019, 06:22 PM IST
பாஜக ஒரு குடும்ப கட்சி அல்ல: காங்கிரசை மறைமுகமாக தாக்கிய பிரதமர் மோடி title=

மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஊழியர்களிடம் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் பெயரை குறிப்பிடாமல் குடும்ப அரசியலைக் கடுமையாக தாக்கி பேசினார். எங்கள் கட்சியில் ஒரு நபரோ அல்லது ஒரு குடும்பத்தினரோ என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய முடியாது எனவும் கூறினார். ஆனால் சில கட்சியில் ஒரே ஒரு குடும்பம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். சிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு கட்சிதான் குடும்பம். கட்சியை குடும்பமாக நினைக்கும் ஒரே கட்சி பிஜேபி தான் என பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து முறையான அறிவிப்பு வந்தபிறகு பிரதமர் குடும்ப அரசியலை குறித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது. 

இன்று(புதன்கிழமை) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வதேரா கட்சி பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பை ஒப்படைக்கப்பட்டது. இதுக்குறித்து காங்கிரஸ் நிர்வாக்கு கூறுகையில், பிரியங்காவின் வருகையால் உத்திரப்பிரதேசத்தில் கிழக்கு பகுதியில் புதிய சிந்தனையோடு அரசியலில் ஒரு 'நேர்மறையான' மாற்றம் ஏற்ப்படும் எனக் கூறினார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கி இருப்பது என்பது காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதில் ராகுல் காந்தி தோல்வி அடைந்திருப்பதைக் காட்டுகிறது என பிஜேபி தெரிவித்துள்ளது.

Trending News