புயலால் பதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அறிவித்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலத்தில் புயல் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

Last Updated : Apr 17, 2019, 03:52 PM IST
புயலால் பதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அறிவித்தார் பிரதமர் மோடி! title=

குஜராத் மாநிலத்தில் புயல் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜஸ்தானின், மத்தியபிரதேச மற்றும் குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. இதனைத்தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதேபோல் மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்தது. கடும் புயல், மழைக்கு 19  பேர் பலியாகியுள்ளனர்.

வடமாநிலங்களை திடீரென தாக்கிய இந்த புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு நாங்கள் துணை நிற்போம். மத்திய அரசு அனைத்து உதவிகளையும், ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்துவருவதுடன் கண்காணித்தும் வருகிறது. 

இந்த புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த புயல் மழையால் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் அறிவித்த இந்த நிதி ஆனது குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது, பின்னர் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக எழுந்த விமர்சனங்களை அடுத்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மனிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

Trending News