வானெலி வாயிலாக நாட்டு மக்களுடன் பேசும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

நாட்டின் அனைத்து பிரிவுகளுடனும் இணைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் COVID-19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக வானொலிகளில் வெள்ளிக்கிழமை பேசவுள்ளார்.

Last Updated : May 22, 2020, 09:43 AM IST
வானெலி வாயிலாக நாட்டு மக்களுடன் பேசும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்! title=

நாட்டின் அனைத்து பிரிவுகளுடனும் இணைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் COVID-19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமூக வானொலிகளில் வெள்ளிக்கிழமை பேசவுள்ளார்.

இந்த பேச்சு நாட்டின் அனைத்து சமூக வானொலி நிலையங்களிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

அமைச்சரின் பேச்சுக்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பப்படும்.

கேட்போர் அமைச்சரின் பேச்சைக் கேட்க FM கோல்ட் (100.1MHz) வானொலியை கேட்லாம், இந்தியில் மாலை 7:30 மணிக்கு மற்றும் ஆங்கிலத்தில் இரவு 9:10 மணிக்கும் அமைச்சரின் பேச்சு ஒலிபரப்பப்படும்.

"கொரோனா தொடர்பான தகவல்தொடர்புகளுக்காக நாட்டின் அனைத்து பிரிவுகளையும் சென்றடைய அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 290 சமூக வானொலி நிலையங்கள் உள்ளன, அவை ஒன்றாக அடிமட்ட மக்களை அடைய ஒரு பெரிய தளத்தை வழங்குகின்றன.

இந்த பேச்சு இந்தியாவின் தொலைதூர மூலைகளில் உள்ள மக்களைச் சென்றடைய அவர்களின் சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து சமூக வானொலி நிலையங்களின் ரசிகர்களையும் இணைக்கும் வகையில் ஒரே நேரத்தில் அமைச்சர் உரையாற்றுவது இதுவே முதல் முறை. பேச்சின் போது, ​​சமூக வானொலி நிலையங்களின் கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News