புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார் மோடி!

புதுடெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்காக அற்பணித்தார்!

Last Updated : Feb 25, 2019, 09:00 PM IST
புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார் மோடி! title=

புதுடெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்காக அற்பணித்தார்!

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச் சின்னமாக டெல்லியில் கட்டப்பட்டது. இங்கு, அமர்ஜவான் ஜோதி என்ற பெயரில் 1971-ஆம் ஆண்டு முதல் அணையா ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது.

இதனை விரிவுபடுத்தி,  பிரமாண்ட அளவில்  போர் நினைவுச் சின்னம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்காக அற்பணித்தார்.  இந்நிகழ்ச்சில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதனையடுத்து விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள்... "கடந்த 2014-ஆம் ஆண்டில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் போர் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. தற்போது திறப்பு விழாவினை எட்டியுள்ளது, இதனை புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்" என தெரிவித்தார்.

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே 1962-ல் நடந்த போருக்குப் பின் போர் நினைவுச் சின்னத்தை விரிவுபடுத்தி, புதுப்பித்து பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனினும் நீண்டகாலமாக இந்த கோரிக்கை நிலுவையில் இருந்து வருகிறது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் புதுப்பொலிவுடன் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது போர் நினைவுச் சின்னம் புதுப்பிக்கப்பட்டு நாட்டு மக்களுக்காக அற்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News