மெகா கூட்டணி ஆனது அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் புனிதமற்ற கூட்டணி என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்!
அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகின்றது. அந்த வகையில் முதற்கட்டமாக உத்திய பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் பாஜக-வின் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இப்பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
மேலும் காணொலி மூலம் மாநிலவாரியாக பாஜக நிர்வாகிகளுடனும், பூத் ஏஜென்ட்டுகளுடனும், தொண்டர்களுடனும் அவர் உரையாற்றினார். அந்தவகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளுடனான காணொலி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இஐத்தொடர்ந்து நாட்டின் தென்மாநிலங்களில் பாஜக-விற்கு பலம் சேர்க்கும் வகையில், தென் மாநிலங்களில் மோடி அதிகமான பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும் வகையில் அவரது சுற்றுப்பயணம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் இன்று மத்திய சென்னை, சென்னை வடக்கு, மதுரை, திருச்சி, திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாஜக-வினருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது., பாஜக-விற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் கூட்டணி, செல்வந்தர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட நலன்களுக்காக அமைக்கப்படும் புனிதமற்ற கூட்டணி என குற்றம்சாட்டினார்.
முன்னதாக, காங்கிரசின் அராஜகத்தை வீழ்த்துவதற்காகவே மறைந்த ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி எம்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால், அக்கட்சியின் இப்போதைய தலைவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க துடிக்கிறார் எனவும் சந்திரபாபு நாயுடுகுறித்து விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் எதேச்சாதிகாரம் யாரையும் விட்டு வைத்ததில்லை. குற்றிபாக, மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து MGR ஆட்சியை 1980-ம் ஆண்டு கலைத்த கட்சிதான் காங்கிரஸ் என்பதை மக்கள் உணரவேண்டும் என மோடி குறிப்பிட்டு பேசினார்.