தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை 12.64-km தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில், இன்று பிரதமர் மோடி, இந்த பாதையில் ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.