அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தான் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளை தொடங்கிவிட்டார். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் குடமுழுக்கு விழா நெருங்கிவரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி சிறப்பு விரதத்தையும் பூஜைகளையும் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த சுபநிகழ்ச்சிக்கு நானும் சாட்சியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்துள்ளார்.
अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा में केवल 11 दिन ही बचे हैं।
मेरा सौभाग्य है कि मैं भी इस पुण्य अवसर का साक्षी बनूंगा।
प्रभु ने मुझे प्राण प्रतिष्ठा के दौरान, सभी भारतवासियों का प्रतिनिधित्व करने का निमित्त बनाया है।
इसे ध्यान में रखते हुए मैं आज से 11 दिन का विशेष…
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
இந்த குடமுழுக்கு நடக்கும்போது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன் என்றும், அதற்காக பொதுமக்களாகிய உங்கள் அனைவரிடமும் நான் ஆசிர்வாதம் தேடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது மனதில் எழும் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ள பிரதமர், விடியற்காலையில் எழுவது, சாத்வீக உணவுகளை உண்பது என 11 நாட்கள் விரதம் இருப்பதாக தெரிவ்த்துள்ளர்.
ஜனவரி 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பஞ்சவடிக்கு சென்றிருக்கிறார். இந்த விரத சமயத்தில், அவர் அயோத்தியா ராமருடன் தொடர்புடைய பல்வேறு தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், பிரதமர் வெள்ளிக்கிழமையன்று (2024, ஜனவரி 12) நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் கோதாவரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ கலா ராம் கோயிலில் பிரார்த்தனை செய்து தனது சடங்குகளைத் தொடங்கினார். பகவான் ராமரின் வாழ்வில் இந்த ஆலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அங்கு நடைபெற்ற பஜனைகளில் பங்கேற்று, ராமாயணத்தின் இதிகாசக் கதையை, குறிப்பாக ராமர் அயோத்திக்குத் திரும்புவதைச் சித்தரிக்கும் 'யுத்த அகண்டம்' பகுதியைக் கேட்டுக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆலயத்தை துப்புரவுப்படுத்தும் பணியிலும் பிரதமர் ஈடுபட்டார்.
மேலும் படிக்க | அயோத்தியில் புதிய விமான நிலையம் திறப்பு
11 நாட்கள் விரதம் எப்படி இருக்கும்?
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து, கடவுள் முன் தீபம் ஏற்றிய பிறகு, தியானத்தில் அமர்ந்து மந்திரம் சொல்ல வேண்டும். சாத்வீக உணவு மற்றும் பெரும்பாலும் பழங்களை சாப்பிடுவது அடங்கும். விரதம் இருக்கும் நேரத்தில், அமைதியாக இருக்க வேண்டும். சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாம். அதேபோல கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக யாகம் செய்யலாம். இரவில் தரையில் உறங்குவது என வழக்கமாக பின்பற்றப்படும் பூஜை விதிகளை பின்பற்றலாம்.
பஞ்சவடியின் முக்கியத்துவம்
ராமாயணத்தின் பல முக்கிய நிகழ்வுகளில் பஞ்சவடி இடம்பெற்றுள்ளது. வனவாசத்தின்போது, ராமர், சீதை மற்றும் லட்சுமணன் இங்கு சில ஆண்டுகள் கழித்தனர். பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள தண்டகாரண்ய வனப்பகுதியில் அமைந்திருக்கும் ஐந்து ஆலமரங்கள் உள்ள இடம் பஞ்சவடி என்று அழைக்கப்படுகிறது. ஐந்து ஆலமரங்கள் இருப்பது மங்களகரமானது என்பதால், ராமர் தனது மனைவி மற்றும் தம்பியுடன் இங்கு சில காலம் வசித்தார்.
மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?
அயோத்தியில் ராமருக்கு கட்டப்பட்டு வரும் கோவிலில் ஜனவரி 22ம் ராமர் சிலை நிறுவப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமான நபராக இருப்பார். கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள பலருக்கு கோவில் கும்பாபிஷேகத்திற்காக அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என்பதால் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் சமாஜ்வாதி கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இதைத் தவிர, பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி உள்ளிட்ட நான்கு சங்கராச்சாரியர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்துக் கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர். ஆகம விதிமுறைகளின்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்று இதற்கான காரணம் சொல்லப்பட்ட நிலையில், தற்போது 11 நாட்கள் சிறப்பு விரதத்தை பிரதமர் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ