அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி Virtual Meet

கொரோனா வைரஸின் வளர்ந்து வரும் இரண்டாவது அலையை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் பிரதமர் மோடி .

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2021, 05:22 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் மெய்நிகர் சந்திப்பு நடத்தினார்.
    கொரோனா வைரஸின் வளர்ந்து வரும் இரண்டாவது அலையை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி.
    பிரதமர் இதுவரை, கொரோனா வைரஸ் நிலைமை குறித்து மாநிலங்களுடன் பல மெய்நிகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி Virtual Meet title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் உயர் மட்ட மெய்நிகர் சந்திப்புக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில், பிரதமர் மோடி சில மாநிலங்களில் அதிகரித்து வரும் COVID-19 தொற்றுநோய் குறித்த கவலைகளை வெளிப்படுத்தினார். மேலும் கொரோனா வைரஸ் அலையின் "இரண்டாவது உச்சத்தை" நிறுத்த விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் கூட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததால், இந்த மெய்நிகர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என டி.எம்.சி வட்டாரங்கள் ஏ.என்.ஐ.-யிடம் தெரிவித்தன. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் குறிப்பிடப்படாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 

முதலமைச்சர்களுடனான பிரதமருடைய சந்திப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. கோவிட் -19 உச்சத்தை இப்போதே கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி (PM Modi) கூறினார்.

2. இன்று இந்தியாவில் 96% க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று: பிரதமர் மோடி

3. மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார்.
4. உலகில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் பல அலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நம் நாட்டிலும், சில மாநிலங்களில் திடீரென தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர்களும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் நேர்மறை விகிதம் மிக அதிகமாக உள்ளது, தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது: பிரதமர்.

ALSO READ: Coronavirus update: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாபில் அதிகரிக்கிறது கொரோனா

5. கொரோனாவின் வளர்ந்து வரும் இரண்டாவது அலையை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்காக, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டியிருக்கும்: பிரதமர்

6. இதுவரை தங்களை பாதுகாத்துக் கொண்ட மற்றும் பாதுகாப்பான மண்டலங்களாக இருந்த பல மாவட்டங்களில் இந்த திடீர் அதிகரிப்பு காணப்படுகிறது. நாட்டின் 70 மாவட்டங்களில் தொற்று கடந்த சில வாரங்களில் 150% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. நாம் இதை இப்போதே நிறுத்தவில்லை என்றால், நாடு முழுவதும் இந்த நிலை ஏற்படலாம்: பிரதமர். 
7. கொரோனா வைரஸின் வளர்ந்து வரும் இரண்டாவது அலையை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி.
8. COVID க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் உலகில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.: பிரதமர் மோடி.

9. பொதுமக்களை பீதியடையச் செய்யத் தேவையில்லை. அச்சம் நிறைந்த சூழல் இருக்க வேண்டிய அவசியமில்லை. சில முன்னெச்சரிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். பிரதமர் மோடி.
10. சில பகுதிகளில் மட்டும் ஏன் சோதனைகள் குறைவாக நடக்கின்றன? சில இடங்களில் மட்டும் ஏன் தடுப்பூசிகள் குறைவாக வழங்கப்படுகின்றன? இது நல்லாட்சிக்கு வந்துள்ள சோதனையாகும். நமது நம்பிக்கை நம் ஜாக்கிரதையை தளர்த்தி விடக்கூடாது: பிரதமர்.

பிரதமர் இதுவரை, கொரோனா வைரஸ் (Coronavirus) நிலைமை குறித்து மாநிலங்களுடன் பல மெய்நிகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்முறையையும் விரைவாகவும் திறம்படவும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

ALSO READ: சிரமமில்லாமலும், வலியில்லாமலும் இருந்தது: COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு Ratan Tata

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News