Cryptocurrency: கிரிப்டோகரன்ஸி குறித்து பிரதமர் மோடி முக்கிய கூட்டம்

கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதால் பெரும் வருமானம் கிடைக்கும் என்ற நிலவும் தவறான எண்ணங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2021, 06:13 AM IST
  • கிரிப்டோ கரன்சி மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இயலாது.
  • அரசு விரைவில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
  • மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Cryptocurrency: கிரிப்டோகரன்ஸி குறித்து பிரதமர் மோடி முக்கிய கூட்டம் title=

புதுடெல்லி: கிரிப்டோகரன்சிகளில் (Cryptocurrency) முதலீடு செய்வதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று நிலவும் தவறான எண்ணங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பான கொள்கையை வகுப்பதற்காக நிபுணர்களுடன் அவர் சனிக்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்தினார்.

பிரதமர் மோடி (PM Narendra Modi)  கூட்டத்தில், 'கிரிப்டோகரன்சி தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாத விளம்பரங்களில் மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்து இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும்' என்று கூறினார்.

மேலும் "இதுபோன்ற கட்டுப்பாடற்ற சந்தைகள் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியின் ஆதாரமாக மாறுவதை அனுமதிக்க முடியாது," என்று பிரதமர் வலியுறுத்தினார். 

கிரிப்டோகரன்சிகள் குறித்த இந்த உயர்மட்டக் கூட்டத்தில், பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த கவலைகள் எழுப்பப்பட்டன. கிரிப்டோ சந்தைகளுக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்க நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கிரிப்டோகரன்ஸி (Cryptocurrency) குறித்த மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

ALSO READ | COP26 Summit: பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க உரையின் முக்கிய அம்சங்கள்

கிரிப்டோ கரன்ஸி  வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது.  எனவே, இதை உன்னிப்பாகக் கண்காணித்து, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முற்போக்கானதாகவும், முன்னோக்கிச் சிந்திக்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் சிறப்பு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், கிரிப்டோ கரன்ஸியின் நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அரசாங்கம் தீவிரமாக ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் பங்கேற்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பில் கிரிப்டோகரன்சியின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ALSO READ  | மின்சார கட்டணம் அதிரடியாக அதிகரிக்கும்! விதிகளை அமல்படுத்தியது மத்திய அரசு

முன்னதாக கிரிப்டோகரன்சிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரிசர்வ் வங்கி விவரித்துள்ளது. கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அவற்றின் சந்தை மதிப்பு குறித்தும் மத்திய வங்கி சந்தேகம் எழுப்பியுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், கிரிப்டோகரன்சிகள் மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டில் இல்லாததால், நிதி அமைப்புக்கு அது கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கூறினார்.

கிரிப்டோகரன்ஸிகளின் விளைவுகளை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி குழு ஒன்றை அமைத்தது. இதன் அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கிரிப்டோகரன்சியை தடை செய்து ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்தது. இதற்குப் பிறகு, இந்த டிஜிட்டல் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பரிந்துரைக்க ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் குழு ஒன்றை அமைத்தது.

ALSO READ | COVID-19 Vaccination: 100 கோடி தடுப்பூசி சாதனையும், பிரதமரின் உரையும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News