தேர்தலில் வெற்றி பெற்ற ஜூனியர் விராத் கோலி -வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகும் டூப்ளிகட் விராத் கோலி காணொளி.

Written by - Shiva Murugesan | Last Updated : May 29, 2018, 04:10 PM IST
தேர்தலில் வெற்றி பெற்ற ஜூனியர் விராத் கோலி -வைரல் வீடியோ title=

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சாயலில் இருக்கும் ஒருவரை ஜூனியர் விராத் கோலி என்று மக்கள் அழைத்து வருகின்றனர். இவர் மகாராஷ்டரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷிரூர் தஹாசிலில் ராம்லிங்க கிராமத்தின் பஞ்சயாத் தேர்தல் பேரணியில் ஈடுபட்டு உள்ளார். 

ராம்லிங்க கிராமத்தில் பஞ்சயாத் தேர்தலில் பேட் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் பேட் சின்னத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால், அவரை கிராம மக்கள் டூப்ளிகட் விராத் கோலி என்று விளம்பரப்படுத்தினர்.

இவரின் இயற்பெயர் சௌரபா காடே (sourabha gade). இவர் ஒரு பொறியாளர். இவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கும் போது கிரிக்கெட் விளையாடுகிறார். 

இதைக்குறித்து அவரிடம் கேட்டபோது, டோனி, விராத், ஏ டி வில்லியர்ஸ் மற்றும் மெக்கலம் ஆகிய வீரர்கள் தான் எனக்கு ரொம்ப புடிக்கும். மக்கள் என்னை டூப்ளிகட் விராத் கோலி என்று அழைப்பதில் பெருமையாக இருந்தாலும், சில சமயங்களில் அவர்கள் என்னை சூழ்ந்துக்கொண்டு செல்பி எடுக்கும் போது எனக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறினார்.

Trending News