COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது BookMyShow!

COVID-19 தொற்றுநோய் மற்றும் முழு அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள  ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளம் BookMyShow, தனது 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுள்ளது. 

Last Updated : May 29, 2020, 07:55 PM IST
COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது BookMyShow! title=

COVID-19 தொற்றுநோய் மற்றும் முழு அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள  ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளம் BookMyShow, தனது 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்யுள்ளது. 

வரவிருக்கும் மாதங்களில் அதன் வருவாய் "வெகுவாகக் குறையும் என  எதிர்பார்க்கப்படுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓலா, உபேர், ஜொமாடோ மற்றும் ஸ்விக்கி உள்ளிட்ட பல தொழில்நுட்ப  வணிக  நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக வருவாய் இழப்பு மற்றும் நிச்சயமற்ற வணிகச் சூழலுக்கு எதிராக போராடி வரும் நிலையில் தனது நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இந்த வரிசையில் தற்போது BookMyShow நிறுவனமும் இணைந்துள்ளது.

"... வரவிருக்கும் மாதங்களில் வருவாய் வெகுவாகக் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், எங்கள் செலவினங்களைக் குறைக்கும் பணியை  எடுக்க வேண்டியுள்ளது. இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள 1,450 ஊழியர்களில் சுமார் 270 ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவர்" என்று BookMyShow தலைமை நிர்வாகி ஆஷிஷ் ஹேம்ராஜனி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான நிதி உதவி,  சுகாதார காப்பீடு ஆகியவற்றை வழங்க நிறுவனம், தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய  பதவி  வகிக்கும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் இருந்து, 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விட்டுக் கொடுக்க தானாக முன்வந்துள்ளனர் என்று கூறிய ஹெம்ராஜனி, போனஸை தவிர அனைத்து சம்பள உயர்வுகளையும் விட்டுக்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 தொற்றுநோய் மற்றும் லாக்டவுனுக்கு மத்தியில், மல்டிபிளெக்ஸ், தியேட்டர்கள் மற்றும் அரங்கங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர், இதனால் இது தொடர்பான வர்த்த சேவையில், இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொழியாக்கம் – அரிஹரன்

Trending News