ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் Revolt RV1 அறிமுகமானது!

Revolt RV1 in India: ரிவோல்ட் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை பயணிகள் பிரிவில் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு மாடல்களில் அறிமுகமாகும் இருசக்கர வாகனங்களின் விலைகள், சிறப்பம்சங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம்...  

Revolt RV1 மோட்டர்சைக்கிளின் விலை என்ன? விலையை மட்டுமல்ல, அதன் சிறப்பம்சங்களையும் இந்த கட்டுரையை படித்தால் தெரிந்துக் கொள்ளலாம்...

1 /9

Revolt RV1 பைக் மற்றும் அதன் பிரீமியம் வகை RV1+ உடன், 250 கிலோ பேலோட் திறன், பரந்த டயர்கள், இரட்டை டிஸ்க் பிரேக்குகள் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

2 /9

புதிய பைக்கின் அம்சங்கள், பேட்டரி திறன், சார்ஜ் செய்யும் நேரம் என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்

3 /9

ரிவோல்ட் ஆர்வி1 பைக்கின் அறிமுக விலை ரூ.84,990   

4 /9

ரிவோல்ட் ஆர்வி1 பைக்கின் பிரீமியம் மாறுபாட்டான RV1+ விலை ரூ.99,990

5 /9

ரிவோல்ட் மோட்டர்ஸின் 80 லட்சத்திற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் விற்பனையாகிறது

6 /9

இந்த இரு மாடல்களும், வழக்கமான பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களை விட மூன்று மடங்கு அளவுக்கு செலவை குறைக்கும் என கூறப்படுகிறது

7 /9

RV1 ஆனது 250 கிலோ பேலோட் திறன் மற்றும் மேம்பட்ட நிலைத்தன்மைக்கான பரந்த டயர்கள் உட்பட பல் சிறப்பம்சங்களுடன் வருகிறது. சக்திவாய்ந்த மிட்-மோட்டார் மற்றும் செயின் டிரைவ் சிஸ்டம் மென்மையான முடுக்கம் மற்றும் சொகுசான பயணத்தை உறுதி செய்கிறது. டூயல் டிஸ்க் பிரேக்குகள், ரிவர்ஸ் மோட் உட்பட பல வேக முறைகள் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்றன

8 /9

நிகழ்நேர தரவு, ஸ்டைலான LED விளக்குகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட சார்ஜர் சேமிப்பகத்திற்கான 6-இன்ச் டிஜிட்டல் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த பைக்குகள், வேகமாக சார்ஜ் செய்யும் திறன்கள் கொண்டவை. RV1+ பைக், 1.5 மணிநேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். 

9 /9

100 கிமீ வரம்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. 2.2 kWh பேட்டரி அல்லது 160 கிமீ வரம்பை நீட்டிக்கும் 3.24 kWh பேட்டரி ஆகியவற்றில் எது வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்துக் கொள்ளலாம். முக்கியமாக இவை இரண்டும் நீர்புகா தன்மைக்காக IP67 தரம் வாய்ந்தவை