Viral Video: பவ்வியமாக படுத்திருக்கும் சிங்கத்திடம்... இளம்பெண் செய்யும் சேட்டையை பாருங்க!

White Lion Viral Video: பவ்வியமாக சாந்தமாக படுத்திருக்கும் வெள்ளை சிங்கத்திடம் ஒரு இளம்பெண் சேட்டை செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ குறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 21, 2024, 07:39 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டதாகும்.
  • அனைத்து தளத்திலும் இப்போது வைரலாகி வருகிறது.
  • இன்ஸ்டாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேல் வியூஸ் வந்துள்ளது.
Viral Video: பவ்வியமாக படுத்திருக்கும் சிங்கத்திடம்... இளம்பெண் செய்யும் சேட்டையை பாருங்க! title=

White Lion Viral Video: சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்பதுபோல்... காட்டுக்கு ராஜா யாருனு கேட்டா அன்றும் இன்றும் என்றும் எல்லாரும் சிங்கம் என்றுதான் சொல்வார்கள். அதற்கு காரணத்தை கேட்டால் யாருக்கும் நிச்சயம் உறுதியாகத் தெரியாது. காட்டில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிங்கத்தின் அந்த கம்பீரமும், தோரணையும் (?!) தான் எல்லோரையும் அந்த முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். 

அதுவும் ஆண் சிங்கம் சிங்கிளா, கெத்தா, அதன் பிடரியை சிலுப்பிவிட்டு வரும்போது, 'நான் அடிச்சா தாங்க மாட்ட... நாலு மாசம் தூங்க மாட்ட' பிஜிஎம் நமது மனதில் நிச்சயம் தோன்றும். தொலைக்காட்சியிலோ, இப்போது மொபைல், லேப்டாப்பிலேயோ சிங்கம் கர்ஜிப்பதையும், காட்டில் நடந்து வருவதையும் பார்ப்பதற்கே மிரட்சி ஏற்படும். அப்படியிருக்கும் சிங்கம் பவ்வியமாக உட்கார்ந்திருந்தால் உங்களுக்கே பார்க்க பிடிக்காது. ஏனென்றால், ராஜாவை ராஜத்தோரணையில் மட்டும் பார்ப்பதற்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா...

சிங்கத்துடன் சேட்டை...

ஆனால், இங்கு ஒரு பெண் ஒரு வெள்ளை சிங்கத்தை கொஞ்சிக்குழாவி, அதனிடம் சேட்டை செய்கிறார்... அந்த பெண் வெள்ளை சிங்கத்திடம் சேட்டை செய்யும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்டாவில் மட்டுமின்றி பிற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ அதிகம் பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் விலங்குகள் நல ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சுனாமி போன்ற அலையில் ஸ்விம்மிங்கை போடும் மக்கள்..பயமே இல்லையா? வைரல் வீடியோ..

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வனவிலங்கு காப்பாகமான Single Vision காப்பக்கத்தின் பணியாளரான சமந்தா ஃபேர்கிளாத் என்பவர்தான் பவ்வியமாக தரையில் அமர்ந்திருக்கும் வெள்ளை சிங்கத்தை கட்டிப்பிடித்து, கொஞ்சுகிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை அவர் கடந்த செப். 2ஆம் தேதி அன்று பதிவிட்டுள்ளார். இதுவரை சுமார் 1 லட்சத்திற்கும் மேலான வீயூஸை இந்த வீடியோ பெற்றுள்ளது. 12 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் லைக் செய்தும் உள்ளனர்.

சிங்கம், புலி, சிறுத்தை...

இந்த வீடியோவில் அந்த வெள்ளை சிங்கத்தை அவர் கட்டியணைக்கும்போது எவ்வித பயமோ, பதற்றமோ இன்றி இருக்கிறார். அந்த சிங்கமும் எவ்வித அசௌகரியத்தையும் காண்பிக்கவில்லை. அதை பார்க்கும்போதே அவர் அங்குள்ள வனவிலங்குகளுடன் எவ்வளவு இணக்கணமாக, நெருக்கமாக இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் சிங்கம் மட்டுமின்றி புலி, சிறுத்தை ஆகியவற்றுடனும் விளையாடும் வீடியோக்களை அதிகம் காண முடிகிறது. பெரும் பூனைகள் உடன் இருந்தால் வாழ்க்கை சிறக்கும் (Life is better with big cats) என அவரின் இன்ஸ்டா பக்கத்தின் முகப்பில் இந்த வாசகத்தை குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளை சிங்கங்கள்

இந்த வீடியோவில் காணப்படும் வெள்ளை சிங்கங்கள் Panthera Leo வகையை சேர்ந்தவை எனவும், அவை பெரும்பாலும் தூய வெள்ளை நிறத்திலோ, கிரீம் நிறத்திலோ அல்லது தங்க நிறமாகவோ இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர்களின் கண்கள் வெளிர் மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்கும். வயது முதிர்ந்த வெள்ளை சிங்கங்கள் பொதுவாக 260-550 கிலோ எடை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இவை குடும்பமாக வாழக்கூடிய ஒன்றாகும். துரதிருஷ்டவசமாக உலகம் முழுவதும் இவற்றின் எண்ணிக்கை 300 ஆக தான் உள்ளது. எனவே, இவற்றை பாதுகாக்க கடும் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | யானைக்கும் யானைக்கும் சண்டை தசரா கொண்டாட்டத்தில் நடந்த மோதல் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News