Jupiter Retrograde In Gemini : மிதுனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், தன் முன்னே இருக்கும் பாதையில் செல்லாமல், வந்த பாதையிலேயே செல்வது வக்ர கதி இயக்கம் என்று சொல்வார்கள்...
மிதுன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு கிரகம் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்து பிப்ரவரி 25 வரை இதே நிலையில் பயணிப்பார். குருவின் இந்த வக்ர பெயர்ச்சியால் சுபமான பலன்களை அனுபவிக்கும் ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா?
அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதியன்று, குரு தான் இருக்கும் ராசியில் வக்ர நிலையில் இயங்கத் தொடங்குவார். மிதுனத்தில் இருக்கும் குருவின் வக்ரகதி மாற்றம் பலருக்கு மோசமான பலன்களைக் கொடுத்தாலும், சிலருக்கு அருமையான பலன்களைக் கொடுக்கும்
ராகு மற்றும் கேதுவைத் தவிர கிரகங்கள் அனைத்துமே தங்களது பாதையில் கடிகாரச்சுற்றில் சென்று கொண்டிருக்கும் அவை ஒருபோதும் பின்னோக்கி வருவதில்லை.
ஆனால் அவை, தங்கள் இயக்கத்தை நிறுத்தும்போது, பின்னோக்கி வருவது போல் தோற்றம் அளிக்கின்றன. அதைத் தான் "வக்ர கதி" இயக்கம் என்கிறோம். அக்டோபர் ஒன்பதாம் தேதி, குரு தனது இயக்கத்தை நிறுத்தும் வக்ர கதி, யாருக்கெல்லாம் நன்மைகளைக் கொடுக்கும்?
மீன ராசியினருக்கு வக்ரத்தில் இருக்கும் குரு நல்ல பலன்களைக் கொடுப்பர். தடைபட்ட பண வரத்து சீராகும், பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனதில் நிம்மதி ஏற்படும்
மிதுனத்தில் வக்ரமாகும் குருவின் தாக்கத்தினால், தனுசு ராசிக்காரர்களின் மனதில் உல்லாசம் பெருகும். காதல் கைகூடும், குடும்ப வாழ்க்கையும் இனிக்கும். மொத்தத்தில் கனா கண்ட காதல் கரும்பாய் இனிக்கும்
துலாம் ராசிக்கு அற்புதமான பலன்களை வக்ர கதியில் இருக்கும் குரு கொடுப்பார். நாலு பேர் பாராட்டும்படி வாழ வேண்டும் என்று சொல்லும் போது, அதற்கு துலாம் ராசியினரை உதாரணம் சொல்லும் அளவுக்கு நல்ல பலன்களை கொடுத்துச் செல்வார் மிதுனத்தில் வக்ரமாகும் குரு
மிதுன ராசியினருக்கு பொன் பொருள் வந்து சேரும் பொற்காலமாக குருவின் வக்ர பெயர்ச்சி இருக்கும்
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது