பழைய ஓய்வூதியத் திட்டம்: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. பழைய ஓய்வூதியம் குறித்து பெரிய அப்டேட் வந்துள்ளது. ஆம், இந்த புதுப்பிப்பின் கீழ், மத்திய அரசு ஊழியர்களும் இப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். அரசு சார்பில் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், டிசம்பர் 22, 2003க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மத்தியப் பணிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஒருமுறை பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான விருப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் உள்ளது
டிசம்பர் 22, 2003 முதல் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) அறிவிக்கப்பட்டது. அத்தகைய ஊழியர்கள் மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 1972 (இப்போது 2021) கீழ் பழைய ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த விருப்பத்தின் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் உள்ளது. இந்த உத்தரவு, 2004ல் பணியில் சேர்ந்த மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) பணியாளர்கள் மற்றும் பிற மத்திய பணியாளர்களுக்கு பொருந்தும். நிர்வாக காரணங்களால் ஆட்சேர்ப்பு செயல்முறை அப்போது தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமை
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ஊழியர்களின் என்பிஎஸ் பங்களிப்பு பொது வருங்கால வைப்பு நிதியில் (ஜிபிஎஃப்) டெபாசிட் செய்யப்படும். பா.ஜ. தலைமையிலான அரசு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஓ.பி.எஸ்.) மீட்டெடுப்பது, அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.
ஒரு வழக்கில் கூட அரசால் வெற்றி பெற முடியவில்லை
ஜனவரி 31 வரை, 23,65,693 மத்திய அரசு ஊழியர்களும், 60,32,768 மாநில அரசு ஊழியர்களும் என்பிஎஸ்-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டதை அடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் நடந்தாலும், ஒரு வழக்கில் கூட அரசால் வெற்றி பெற முடியவில்லை.'
அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தகுதியுடைய ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கடைசி தேதி (ஆகஸ்ட் 31) வரை இந்த விருப்பத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றால், அவர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் தொடர்ந்து கவர் செய்யப்படுவார்கள். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட விருப்பமே இறுதியானது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Old Pension Scheme: அரசு நடவடிக்கை எடுக்குமா? சமீபத்திய அப்டேட் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ