பீகாரில் மே 15-ம் தேதி முதல் NRC பணிகள் நடத்தப்படும் -மோடி!

பீகாரில் NRC செயல்பாடு மே 15-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதியுடன் முடிவடையும் என மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 5, 2020, 12:08 PM IST
பீகாரில் மே 15-ம் தேதி முதல் NRC பணிகள் நடத்தப்படும் -மோடி! title=

பீகாரில் NRC செயல்பாடு மே 15-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதியுடன் முடிவடையும் என மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) மற்றும் நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவு (NRC) ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி சனிக்கிழமை (ஜனவரி 4), பீகாரில் NPR-ன் முதல் கட்ட செயல்பாடு மே 15-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதியுடன் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சுஷில் மோடி, “2020-ஆம் ஆண்டில் NPR செயல்முறை நாட்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை மேற்கொள்ளப்படும். பீகாரில் இது மே 15 முதல் மே 28 வரை செய்யப்படும். அதிகாரிகள் NPR-ஐ செய்ய மறுத்தால் அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் மற்றும் கேரளா முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் CAA, NPR மற்றும் NRC அனுமதிக்க இயலாது என வலியுறுத்தி வரும் நிலையில், பீகார் பாஜக தலைவர் அவர்களது நிலைபாடு நிலைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

NRC பற்றி பேசிய சுஷில் மோடி, இந்த விவகாரம் குறித்து விவாதங்களை நடத்துவது சரியானதல்ல, ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து இதுவரை விவாதிக்கவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். "NPR மற்றும் NRC இரண்டு வெவ்வேறு விஷயங்கள்" என்று குறிப்பிட்ட அவர் காங்கிரஸ், RJD மற்றும் பிற எதிர்க்கட்சிகளை CAA தொடர்பாக முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்., "மேற்கு வங்கம், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட எந்த மாநிலமும் CAA அல்லது NPR-ஐ செயல்படுத்த மறுக்க முடியாது, ஏனெனில் குடியுரிமை தொடர்பாக சட்டத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. NPR-ஐ தயாரிப்பது ஒரு சட்டரீதியான ஏற்பாடாகும், இது எந்த மாநிலமும் செயல்படுத்த மறுக்க முடியாது" என்று குறிப்பிடுள்ளார்.

"எந்த மாநிலத்தின் முதல்வர், CAA மற்றும் NPR-எதிர்த்தாலும், அவற்றை செயல்படுத்த அவர்களால் மறுக்க முடியாது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அல்லது கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் தங்கள் மாநிலங்களில் NPR-ஐ செயல்படுத்த மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் அவர்கள் தொடர்ந்து இவ்வாறு கூறி வந்தாலும், அவர்களால் CAA மற்றும் NPR-ஐ வேண்டாம் என்று சொல்ல முடியாது... இந்த செயல்பாடு நிச்சையம் நடக்கும் இதனை உறுதி செய்யும் விதமாக மேற்கு வங்கம் உட்பட அனைத்து மாநிலத்திலும் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்," என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், காங்கிரஸ் தலைமையிலான UPA மையத்தில் ஆட்சியில் இருந்தபோது 2010-ஆம் ஆண்டில் NPR தயாரிப்பதற்கான செயல்முறை தொடங்கியது என்றும், ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2010 வரை பயிற்சி முடிக்கப்பட்டது என்றும், தற்போதைய அரசாங்கம் NPR 2010-ஐ "புதுப்பித்து வருகிறது" என்றும் சுஷில் மோடி வலியுறுத்தினார்.

Trending News