குற்றவாளிகள் ஒவ்வொருவராக தூக்கிலிடப்பட வேண்டும்: நிர்பயாவின் தாய்

நிர்பயா கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் அனைவரும் ஒவ்வொருவராக தூக்கிலிடப்பட வேண்டும் என நிர்பயாவின் தாய் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2020, 11:21 PM IST
  • நிர்பயாவின் தாய் ஆஷா தேவி தூக்கிலிட தாமதத்திற்கு குற்றவாளிகள் பின்பற்றும் தந்திரங்களை விமர்சித்துள்ளார்.
  • ஆஷா தேவிக்கான கோரிக்கை - குற்றவாளிகளை ஒவ்வொருவராக தூக்கிலிட வேண்டும்.
  • பிப்ரவரி 1 ம் தேதி அனைத்து குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டால் மட்டுமே நிம்மதி கிடைக்கும் என்று ஆஷா தேவி கூறினார்.
  • தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.
குற்றவாளிகள் ஒவ்வொருவராக தூக்கிலிடப்பட வேண்டும்: நிர்பயாவின் தாய் title=

புது டெல்லி: நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான பவன் குமார் குப்தா, தான் குற்றம் செய்த போது மைனர் என்றுகூறி, தனக்கு விதித்துள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தள்ளுபடி செய்தது. இதுக்குறித்து பேசிய நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, தூக்கு தண்டனையை தாமதம் செய்வதற்காக குற்றவாளிகளால் மேற்கொண்டு வரும் வித்தைகளை விமர்சித்தத்தோடு, அவர்களை ஒவ்வொருவராக தூக்கிலிட வேண்டும் என்று கோரினார்.

உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார்கள்:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர், ஆஷா தேவி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ யிடம், "தூக்குத் தண்டனையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குற்றவாளியின் மற்றொரு மோசமான நடவடிக்கை தோல்வியடைந்து உள்ளது. தூக்கிலிட தாமதத்திற்காக அவர் மேற்கொண்ட வித்தை உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டால் மட்டுமே நான் திருப்தி அடைவேன். தூக்கிலிடப்படுவதைத் தவிர்ப்பதற்கு அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் போலவே, அவர்களை ஒவ்வொருவராக தூக்கிலிட வேண்டும். அப்பொழுது தான் சட்டத்துடன் விளையாடுவதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்"  

உச்சநீதிமன்றத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

குற்றவாளிகளுக்கு காலக்கெடு: நிர்பயாவின் தந்தை:
மறுபுறம், நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங், உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வழிகாட்டுதலை வெளியிடுமாறு கோரியுள்ளார். குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களின் எண்ணிக்கையை குறித்து அறிக்கையை தயாரிக்குமாறு அவர் திங்களன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இதனால் பெண்கள் சரியான நேரத்தில் நீதி பெற முடியும் என்றார்.

அவரது (பவன் குப்தா) மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் எங்கள் வழக்கு தொடர்பான ஒரு மனு நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம், எங்கள் இதயம் துடிக்கிறது. இறுதியில் நமக்கு நல்ல செய்தி மட்டுமே கிடைக்கிறது. 

தண்டனையில் தப்பிக்க தாமதம் செய்வதற்காக நான்கு குற்றவாளிகள் தந்திரங்களை மேற்கொண்டு விளையாடியதாக குற்றம் சாட்டிய நிர்பயாவின் தந்தை, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்கும்படி வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டேன் என்றார்.

நீதிக்கான வழிகாட்டுதல்களை வெளியிட உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை:
நிர்பயாவின் தந்தை, "விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என இந்த வழக்கை 3 முறை விசாரித்தன. மனுக்களை தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலக்கெடுவை அமைக்க உச்சநீதிமன்றம் சில அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். இது நிர்பயாவுக்கு மட்டுமல்ல, நம்முடைய மற்ற மகள்களுக்கும் கூட. நிர்பயா மற்றும் பிற மகள்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்க வழிகாட்டு நெறிமுறைகளைத் தயாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோருகிறோம். என்றா.

மரண தண்டனை:
வினய் சர்மா, முகேஷ் குமார், அக்‌ஷய் குமார் சிங் மற்றும் பவன் ஆகிய நான்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை பிப்ரவரி 1 ம் தேதி நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் புதிய வாரண்டுகளை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 2012 டிசம்பர் 16-17 தேதிகளில் தெற்கு டெல்லியில் நகரும் பேருந்தில் 6 நபர்களால் நிர்பயா ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மோசமாக காயமடைந்த நிலையில் சாலையில் வீசப்பட்டார். 29 டிசம்பர் 2012 அன்று நிர்பயா சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News