அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிரடியாக புதிய மசோதா!

அமெரிக்காவில் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2021, 04:13 PM IST
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிரடியாக புதிய மசோதா! title=

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பலர் குடியேறுகின்றனர்.அதிலும் குறிப்பாக, இந்திய மக்களின் வருகை சற்று அதிகமாகவே உள்ளது.  அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற 'கிரீன் கார்டு' கட்டாயம் என்பதால் இதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.  இதனால், அமெரிக்காவில் ஆண்டு தோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கிரீன் கார்டு இந்தியர்களால் பல்வேறு காரணங்களால் எளிதில் பெற முடிவதில்லை.

jeobiden

இந்நிலையில், இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.  இதுகுறித்து நியூயார்க் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் தலைவர் சிரஸ் டி மேத்தா கூறியிருப்பதாவது:-  அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் செய்ய இந்தியர்களுக்காக புதிய சட்ட மசோதா விரைவில் இயற்றப்பட இருக்கிறது. அதில் முக்கிய அம்சமாக, கிரீன் கார்டு பெறுவதில் நிலுவையில் உள்ள இந்திய விண்ணப்பத்தாரர்கள் ரூ.3.80 லட்சம் கூடுதலாக செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ள முடியும்.  எச்1பி விசா வைத்திருப்பவர்களும் தங்களின் வயது வரம்பு முடியும் தருவாயில் இருந்தாலும், அல்லது முடிந்திருந்தாலும் இந்த புதிய மசோதாவின் கீழ் கூடுதலாக பணம் செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இது ஒரு அருமையான மசோதா.என்று அவர் கூறினார்..

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது, அமெரிக்காவில் குடியேற விரும்பியவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் குடியேறி நிரந்தர விசா பெறுவதற்கும் அதிக கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.  இதனிடையே வெளிநாட்டினருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நிரந்தர குடியுரிமை அளிப்பதற்கான ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் புதிய குடியுரிமை மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ UK: 660,000 வேலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திட்டம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News