லக்னோ: ஆதார் அட்டை கட்டாயம் செய்யப்பட்டதை அடுத்து, UPMEB கல்லூரியில் பயிலும் சுமார் 1000 நேபாளி மாணவர்களின் வாழ்க்கை கேள்விகுறி ஆகியுள்ளது!
உத்தரப்பிரதேச மத்ரசா கல்வி வாரியம் (UPMEB) கீழ் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பயிலும் 1000-க்கும் அதிகமான மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகி உள்ளது.
UPMEB-ல் பயிலும் நேபாள மாணவர்கள் அவர்களின் பிறப்பு சான்றிதழ், நேபாள குடியுரிமை சான்றிதழ் அடிப்படையிலே இந்திய கல்லூரியில் அனுமதி பெற்றுள்ளனர். இந்தியர்களிடம் இருக்கம் ஆதார் அட்டை அவர்களிடம் இல்லாபட்சத்தில் அவர்களால் எப்படி ஆதார் எண்ணை கல்லூரியில் பதிய முடியும் என குறிப்பிட்டு தேர்வு வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை இந்த மனுவின் மீது முடிவு எடுக்கப்படாத நிலையில், உபி-யில் பயிலும் நேபள மாணவர்கள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து UPMEB பதிவாளர் ராகுல் குப்தா தெரிவிக்கையில், அரசு இந்த மனு தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்த மனுவின் மீது முடிவு எடுக்கப்பட வேண்டும் என மாணவர்களின் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது!