NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்

National Democratic Alliance Meeting in Delhi: டெல்லியில் இன்று (ஜூன் 5, புதன்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ள தலைவர்கள் குறித்து பார்ப்போம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 5, 2024, 03:54 PM IST
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி மாலை 4.30 மணிக்கு தொடங்கும்.
  • நிதிஷ்குமாரை போனில் தொடர்புக்கொண்டு பேசிய நரேந்திர மோடி.
  • ஒரே விமானத்தில் நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ்.
NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம் title=

NDA meeting in Delhi: டெல்லியில் புதன்கிழமை நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சியின் பல தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லி வரும் முக்கியத் தலைவர்கள்

டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் காலை 10:30 மணியளவில் பாட்னாவில் உள்ள தனது 1 அன்னி மார்க் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 11 மணிக்கு விஸ்தாரா விமானத்தில் டெல்லிக்கு வந்தடைத்தார். 

2024 லோக்சபா தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (ஜூன் 4) அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி நிதிஷ்குமாரை போனில் தொடர்புக்கொண்டு பேசினார் என்பது கவனிக்கத்தக்கது. அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பீகார் முதல்வருடன் பேசினார். மேலும் அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னதாக, பீகார் முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பீகாரைச் சேர்ந்த தலைவர்களைத் தவிர, என்.டி.ஏ கூட்டத்தில் பங்கேற்கும் மற்ற தலைவர்களான அப்னா தளம் கட்சியின் தலைவர் அனுப்ரியா படேல். அவர் ஏற்கனவே செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி வந்துவிட்டார். மேலும், ராஷ்டிரிய லோக்தல் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பி ஜெயந்த் சவுத்ரியும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

டில்லியில் நடக்கும் கூட்டத்திற்கு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் இருந்து டெல்லிக்கு வருகிறார். 

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மகாராஷ்டிராவிலிருந்து அஜித் பவார் தலைமையிலான என்சிபி பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோரும் வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!

பீகார் 2024 லோக்சபா தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி நிலவரம்

பீகாரில் என்டிஏ (NDA) கூட்டணி 30 இடங்களையும், இந்திய கூட்டணி (India Alliance) 9 இடங்களையும் கைப்பற்றியது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் பப்பு யாதவ் வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (Janata Dal (United)) 12 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) 12 இடங்களிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (Lok Janshakti Party) 4 இடங்களிலும், இந்துஸ்தானி அவாஸ் மோர்ச்சா (Hindustani Awam Morcha) 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை இந்த முறை 9 இடங்கள் குறைந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றது.

டெல்லி பயணத்திற்கு முன்பு முக்கியத் தலைவர்களை சந்தித்த நிதிஷ்குமார்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திற்கு டெல்லி புறப்படுவதற்கு முன், ஜே.டி.(யு) மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரையும் நிதிஷ்குமார் சந்தித்தார். 

மேலும் படிக்க - Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?

ஒரே விமானத்தில் நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவவ்

நிதிஷ்குமார் டெல்லி புறப்பட விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்பு நடந்த சந்திப்பு மிக முக்கியமானது. டெல்லியில் இன்று (ஜூன் 5, புதன்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தவிர, இந்திய கூட்டணிக் கூட்டமும் நடைபெற உள்ளது. பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சென்ற அதே விஸ்தாரா விமானத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் டெல்லிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ்குமாரிடம் கூட்டணி குறித்து பேசுவாரா தேஜஸ்வி யாதவ்?

எவ்வாறாயினும், இரண்டு முன்னாள் கூட்டாளிகளும் ஒரே விமானத்தில் பயணம் செல்வதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமாரை இந்திய கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என தேஜஸ்வி யாதவ் கோரிக்கை வைப்பாரா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்திய கூட்டணியில் நிதிஷ்குமாருக்கு அழைப்பு

நிதிஷ்குமாரை மீண்டும் இந்திய கூட்டணியில் சேர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே அவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஒரே விமானத்தில் இருவரின் பயணம் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க - பெரும்பான்மைக்கு அருகில் பாஜக... கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News