2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் நேற்று(புதன்) அன்று அறிவித்துள்ளதன் படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் மாநில, மக்களவைத் தேர்தல்களை ஒருங்கிணைத்து நடத்த முடியும் என தெரிவித்துள்ளது.
"புதிய இயந்திரங்கள் வாங்கியபின், செப்டம்பர் 2018 வாக்கில், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்," என தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தெரிவித்துள்ளார்.
"எனினும், இதுதொடர்பாக எந்த ஒரு முடிவை எடுப்பதற்கும், சட்ட திருத்தங்களைச் செய்வதற்கும் அரசாங்கத்துடனும், அனைத்துக் கட்சிகளும் ஒருதுனையாக இருக்க வேண்டும்," எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
2019-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தல், 2018-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களை ஒருங்கிணைக்க மத்திய அரசு ஆதரவு தெரிவித்து வருகின்றது.
இந்த முடிவு நடைமுறைப் படுத்தப்பட்டால் ஏப்ரல் 2019-ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்கள், மாநிலத் தேர்தல்கள் தள்ளிவைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.