Ramadan 2023: உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஈத்-மிலாத்-உன்-நபி அல்லது ஈத்-இ மிலாத் கொண்டாடுகிறார்கள். இந்த நாளன்று இஸ்லாமிய இறைதூதர் நபி முஹம்மது அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இது மிகவும் முக்கியமான ஆசீர்வதிக்கப்பட்ட நாள் ஆகும்,
நபிகள் நாயகத்தின் போதனைகள் மற்றும் கருணை செயல்களை நினைவூட்டும் இந்த நாள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான திருநாளாகும். முஹம்மது நபியின் போதனைகளால் சமூகம் பெரிதும் பயனடைந்துள்ளது. நபி தினம், மவ்லித், முஹம்மது பிறந்த நாள் அல்லது நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் என்றும் அழைக்கப்படும் ஈத்-மிலாத்-உன்-நபி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நபிகள் நாயகம் கி.பி 570 இல் 'ரபி-உல்-அவல்' மாதத்தின் 12 ஆம் நாளில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளை கொண்டாடும் வகையில் வீடுகளில் அனைவரும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள், மசூதிகள் மற்றும் தர்காக்களுக்கு சென்று தொழுகை நடத்தி ஈகைத் திருநாளை மக்கள் கொண்டாடுகின்றனர்.
வானில் தோன்றும் பிறை நிலவைக் கொண்டே இந்த நாள் முடிவு செய்யப்படும் என்பதால், உலகம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் ஈத் மிலாத் உன் நபி திருவிழா கொண்டாடப்படுகிறது. ஈத் மிலாத் உன் நபி இந்தியாவில் இந்த ஆண்டு (2023) ஏப்ரல் 22ம் நாள் அன்று கொண்டாடப்படும்.
மேலும் படிக்க | ஊழலை ஆதரிக்கும் பாஜக! தொண்டர்களின் உயிரையும் மதிப்பதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஈத் மிலாத் பண்டிகையின் போது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில வாழ்த்துகள், மேற்கோள்கள் மற்றும் செய்திகள் இவை...
1) அல்லாஹ் நம் அனைவரின் இதயங்களையும் கருணை, அன்பு மற்றும் பொறுமையால் நிரப்புவானாக. ரமலான்!
2) உங்களுக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மவ்லிது, அல்லாஹ் உங்கள் கஷ்டங்களை குறைத்து செழிப்பாக வைப்பாராக.
3) ஈத்-மிலாத்-உன்-நபி என்பது முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும், இது அவரையும் அவரது வாழ்க்கையையும் கொண்டாட ஒரு வாய்ப்பாகும்.
4) ஈத் என்பது கொண்டாட்டங்கள், பண்டிகைகள் மற்றும் பிரார்த்தனைகளின் நேரம்! நாம் அனைவரும் நல்லதைச் செய்வோம், பதிலுக்கு நல்லதைப் பெறுவோம். இனிய ஈத்-மிலாத்-உன்-நபி!
5) முஹம்மது நபி கூறினார்: "பிறருக்கு நன்மை செய்பவர்களுக்கு அல்லாஹ் பத்து மடங்கு ஆசீர்வாதங்களை அனுப்புவான்." அவருக்கு இந்த மவ்லிதில் நமது பிரார்த்தனைகளை அனுப்புவோம்.
6) இந்த புனித நாளின் ஒளி நம் இதயங்களை ஒளிரச் செய்து, நம் மனதை அமைதிப்படுத்தட்டும். இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
7) அல்லாஹ் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு, உங்கள் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவானாக.
8) ஈத்-இ-மிலாத்-உன்-நபியின் இந்த மங்கலான மற்றும் புனிதமான சந்தர்ப்பத்தில், அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வழங்கட்டும்.
9) ஈத் மிலாத் உன் நபியின் நல்ல சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை அனுப்புகிறேன். நிறைய அன்பும் ஆசீர்வாதங்களும்!
இந்த நாளை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுங்கள் மற்றும் அன்பு மற்றும் கருணையின் செய்தியைப் பரப்புங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ