இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!

இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Sep 8, 2024, 07:00 PM IST
  • இந்தியாவில் பரவிய Mpox வைரஸ்.
  • வெளிநாடு சென்ற பயணிக்கு பரவியது.
  • யாரும் பயப்பட வேண்டும் என்று அரசு நம்பிக்கை.
இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்! title=

Mpox எனப்படும் வைரஸ் நோய் பரவி இருந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள்ளது. இதனால் மக்கள் யாரும் பயன்பட வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. "Mpox (குரங்கு பாக்ஸ்) நோய் கண்டறியப்பட்ட நபர் தனிப்படுத்தப்பட்டு சிகிச்சையில் நலமுடன் இருக்கிறார். அவரது உடம்பில் நோய் வைரஸ் மாதிரிகள் இருப்பது தெரிந்தவுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்" என்று சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க

அவருக்கு Mpox வைரஸ் முழுவதும் பரவி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள சில மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. "வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தார்களை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். மேலும் இதனை பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க அரசு தயாராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம், உலக சுகாதார நிறுவனம் Mpox எனப்படும் வைரஸ் நோய் மிகவும் தீவிரமானது என்றும், மக்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியது. ஜனவரி 2022 முதல், 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் Mpox வைரஸ் கண்டறியப்பட்டுள்ளன. 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஒரு பதிவில், "Mpox  பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்!" என்று ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவில் டாக்டர். அதுல் கோயல் என்ற மருத்துவர், மக்களை எவ்வாறு Mpox வைரஸ் தாக்கும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் என்னென்ன அறிகுறிகளை முதலில் பார்க்க வேண்டும், மேலும் அவரை எவ்வாறு குணமடைய செய்வது" என்பதைப் பற்றி பேசி உள்ளார்.

இந்த நோய்த்தொற்று மக்களுக்கு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் தடிப்புகள், கழுத்தில் சுரப்பிகள் வீக்கம், தலைவலி மற்றும் மிகவும் சோர்வாக உணரலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உடல் முழுவதும் அரிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. காய்ச்சல் அல்லது கோவிட்-19 போல் இந்த தொற்று காற்றில் பரவாது. மாறாக, நோய்வாய்ப்பட்ட ஒருவருடன் அருகில் நெருக்கமாக இருக்கும்போது பரவுகிறது. ​​குறிப்பாக அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இது பெரும்பாலும் பரவுகிறது. நோய்வாய்ப்பட்ட நபரை தொடுவது, கொப்புளங்கள் வெடிப்பு அல்லது தோல் உரசுவதன் மூலம் இது பரவுகிறது. நோய்வாய்ப்பட்ட நபர்களை கவனித்துக்கொள்பவர்கள், தொற்று பரவாமல் தடுக்க உதவும் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும்.

ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் வந்தால், அவர்கள் குணமடைய பொதுவாக மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சமயத்தில் அவர்கள் மருத்துவமனையில் தங்குவது நல்லது, அதனால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி அவர்களுக்கு தேவையான கவனிப்பை பெறலாம். தற்போது, ​​குரங்கு காய்ச்சலுக்கு சிறப்பு மருந்து இல்லை. ஆனால் குரங்குக் காய்ச்சல் பெரியம்மை போன்ற பிற வைரஸ்களை போலவே இருப்பதால், அதற்கு பயன்படுத்தப்படும் சில சிகிச்சைகளையும், மருந்துகளையும் இதற்கு பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | தெலங்கானாவில் கனமழை - வெள்ளம்... அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம்வில் கனமழை-வெள்ளம்... அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News