புதுடெல்லி: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்த 10 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று (செவ்வாய்க்கிழமை - ஜூலை 23) சபையில் இதை அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வின் விரிவாக்கம் குறித்து பாஜக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பார்களா? என்று தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய மூன்று மசோதாக்கள் உட்பட 24க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும், அதன் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகவும் பாஜக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அமர்வில் நீட்டிப்பு வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசாங்கம் கூறியதாக தெரிகிறது. இன்று தெரிந்துவிடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்குமா? இல்லையா? காத்திருப்போம்...!!