குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படும் வங்கதேச மாணவிக்கு இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் இடதுசாரி மாணவர் போராட்டக்காரர்கள் நடத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக வங்கதேச மாணவி அப்சரா அனிகா மிம் அவர்களுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமாது கடந்த ஜனவரி 8-ஆம் தேதி விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் இடதுசாரி மாணவர்கள் விஸ்வ பாரதியின் மத்திய அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அனிகா, சில்பா சதனின் முதல் ஆண்டு மாணவி ஆவார். இந்நிலையில் தற்போது அவர் வரும் 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இருப்பினும், இடதுசாரி மாணவி சோம்நாத் சாவ், அனிகா போராட்டங்களில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். எனினும் அனிகா எதிர்ப்பு தெரிவித்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து சோம்நாத் சாவ் வாக்குமூலம் அனிகா-விற்கு உதவா வார்த்தைகளாக மாறியுள்ளது.
CPM தலைவர் முகமது சலீம் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார், "மாணவரை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்பது முற்றிலும் தவறானது. வெளிநாட்டு மாணவர்கள் போராட்டங்களில் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று குறிப்பிடப்பட்ட எழுத்துப்பூர்வ சட்டம் எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "மத்திய அரசு மாணவர்களுக்கு பயமுறுத்தும் அங்கமாக இருக்கிறது, மேலும் மாணவர்கள் போராட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு அரசியல் குழுவில் சேர கூடாது" என்ற குறிக்கோலுடன் செயல்பட்டு வருகிறது எனவும் விமர்சித்துள்ளார்.
FRMO-ஆல் அனிகாக்கு வழங்கப்பட்ட இந்த அறிவிப்பு குறிப்பிடுகையில்., “... அவர் அரசாங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய செயல்பாடு அவரது விசாவின் மீறலாக இருப்பதால், நாட்டை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாகிறது. மேலும் இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து அவர் புறப்பட வேண்டும்” என குறிப்பிடுகுறிது.
மேலும் "இணங்காதது வெளிநாட்டினரின் சட்டம், 1946 இன் கீழ் அவர் மீது வழக்குத் தொடுக்கப்படும்" என்றும் இந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 14 தேதியிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன, எனினும் அனிகாவிற்கு இந்த அறிவிப்பு கடந்த புதன்கிழமை அன்றே கிடைத்ததாக கூறப்படுகிறது.
20 வயது மதிக்கத்தக்க அனிகா மீம், வங்கதேசத்தின் குஸ்டியாவைச் சேர்ந்தவர், S-1 விசாவில் 2018-ன் பிற்பகுதியில் விஸ்வ-பாரதியில் படிக்க இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.