Meghalaya CM Conrad Sangma Cast Vote News in Tamil: 18வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரியில் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை. நாம் ஓட்டு போடுவதோடு, அனைவரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனை உணர்ந்த ஒரு முதலமைச்சர், ட்ரைவரை வாக்களிக்க அனுப்பி விட்டு, காரை தானே ஓட்டிக் வந்து வாக்களித்துள்ளார். ஆம், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா மேற்கு கரோ ஹில்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் காலையிலேயே வாக்களித்தார். தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் மதிப்புமிக்கது. எனவே எனது ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர்களை வாக்களிக்க அனுப்பி வைத்துள்ளேன். என்னால் யாரும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படக்கூடாது என நினைத்து இவ்வாறு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
என்னிடம் வேலை பார்க்கும் அனைவரையும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு கூறியுள்ளேன் என கூறிய, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, வாக்களிக்க காலை 6.30 மணிக்கே தான் வந்து விட்டதாக சிரித்துக் கொண்டே கூறினார். அதிகாலை வந்தால், சீக்கிரம் வாக்களித்துவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் இங்கு வந்தபோது மையம் முழுவதும் நிரம்பியிருந்தது என சிரித்துக் கொண்டே கூறினார். ஏராளமானோர் வாக்களிக்க வந்திருந்தனர். காலை 6:30க்கே சுமார் 200 பேர் வந்திருந்தனர். மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது நல்ல செய்தி என்றார்.
Drove myself to reach the polling station this morning with the hope to cast my vote but was surprised that electorates had already lined up. I am in que to cast my vote from 630 am. I urge every citizen to come out and exercise their democratic right. pic.twitter.com/SHgS2UJf9q
— Conrad K Sangma (@SangmaConrad) April 19, 2024
மேலும் படிக்க | Lok Sabha Election Live: மக்களவை தேர்தல் 2024... தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு!
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை தொடரும். கடுமையான கோடை காலத்தை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கக் | வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ