புதுடில்லி: சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் 4 சதிகாரர்களை பயங்கரவாதிகள் என இந்திய அரசு இன்று (புதன்கிழமை) அறிவித்தது. இந்த பட்டியலில் ஹபீஸ் சயீத், ஜாக்கி உர் ரஹ்மான் லக்வி, மசூத் அசார் மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர்.
2008 ஆம் ஆண்டில் 26/11 பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் ஜமாஅத்-உத்-தாவா (Jamaat-ud-Dawa) என்ற பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் இந்த பட்டியலில் உள்ள மற்றொருவர லஷ்கர்-இ-தைபா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஜாக்கி உர் ரஹ்மான் லக்வி ஆவர். காஷ்மீரில் உள்ள எல்.ஈ.டி (Lashkar-e-Taiba) யின் தளபதியாக உள்ளார்.
இந்த பட்டியலில் மூன்றாவது பெயர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் (Jaish-e-Mohammed) மாஸ்டர் மசூத் அசார். இவர் மும்பை குண்டு குண்டுவெடிப்பு தொடர்புடைவர். இவரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மும்பை தொடர்குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியவரான நிழல் உலக தாதா இருக்கும் தாவூத் இப்ராகிமின் பெயரும் இடம் பெற்றுள்ளது.